Thursday, August 11, 2011

சுந்தரி

எல்லாருக்கும் நமஸ்காரம்! உம்மாச்சியோட அனுக்ரஹத்துல எல்லாரும் செளக்கியம்னு நம்பறேன். உம்மாச்சி காப்பாத்துல எழுதி ரொம்ப நாள் ஆகர்து. எழுதக்கூடாதுனு எண்ணம் இல்லை, இருந்தாலும் ஓரளவுக்காவது மனசு லயிச்சு உருப்படியா எழுதனுமோ இல்லையோ.

அம்பாளை குழந்தையா தியானம் பண்ணர்து ரொம்ப செளகர்யமான விஷயம் தெரியுமோ! நன்னா அழகா வகிடுஎடுத்த கூந்தல், சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி, அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி, அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும், அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,குறு நகை செய்யும் குட்டி வாய்..... இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ! அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம்.



பாலா திரிபுரசுந்தரி

லலிதா ஸஹஸ்ரனாமத்தோட ஆரம்ப தியான ச்லோகத்துல அம்பாளை பாத்து சிந்தூராருண விக்ரஹாம்னு வர்ணிக்க ஆரம்பிச்சு இருப்பா. ஓவியம் தீட்டரோது அந்த ஓவியர்களோட கற்பனையானது கடல் அளவுக்கு பரந்து விரிய ஆரம்பிச்சுடும். அந்த சமயம் அவாளுக்கு நேரடி வர்ணங்களான சிகப்பு,பச்சை,மஞ்சள் மாதிரியான நிறங்களோட அவா கற்பனை கட்டுப்பட்டு நிற்காமல் ரெண்டு மூனு வர்ணங்களை கலந்து வர்ணஜாலம் காட்ட ஆரம்பிச்சுடுவா. அதே மாதிரி அம்பாளோட ரூபலாவண்யத்தை சொல்லும் போது நன்னா நிறமா இருந்தானு சொல்லாமல் குங்கும சிகப்பையும் சூரிய சிகப்பையும் கலந்த மாதிரி இருந்தாளே!னு ஆரம்பம் ஆகும். ஏதுடா இது? சூரிய சிகப்புனு சொன்னதுக்கு அப்புறமும் நமக்கு சந்தேகம் குறைய மாட்டேங்கர்து. கடைசி வரைக்கும் சந்தேகப்படர்துலையும் கேள்வி கேக்கர்துலையுமே நம்ம ஜென்மாவை கழிச்சுட்டு சமத்தாட்டமா நிக்கர்துல நமக்கு நிகர் நாம தான். மாத்தி மாத்தி கேள்வி கேட்டாக்க மேதாவிலாஸம் ஜாஸ்தி ஆகுமே தவிர ஆத்மானுபவம் ஒரு போதும் வாய்க்கப் போகர்து இல்லை. ஒவ்வொரு சமயத்துலையும் சூரியனோட நிறம் மாறுபடும். சிவப்பு,இளஞ்சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள் மறுபடியும் ரத்த சிவப்பு. இதுல எந்த நிறம்னு நமக்கு புரியர்துக்கு அபிராமி பட்டர் “உதிக்கின்ற செங்கதிர்”னு பளிச்னு சொல்லி இருப்பார். உதயகால சூரியனுக்கு அருணன்னு தான் பேர். பட்டரும் இதே மாதிரி தான் ஆரம்பிப்பார். உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்...னு அது போகும். அபிராமி பட்டர்தான் சங்கரரா வந்தாரோ?னு நினைக்கும் படியா செளந்தர்யலஹரி & லலிதா ஸஹஸ்ரனாமத்தோட வியாக்கியானம் அபிராமி அந்தாதில பல இடத்துலையும் நாம ரசிக்க முடியர்து.

பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் பிரிவுல ஸ்தோத்ர கண்டத்திலேந்து வரர்து தான் இந்த அழகான லலிதா ஸஹஸ்ரனாமம். லீலா வினோதங்கள் நிறைந்தவள் லலிதா, லீலை யாரு ஜாஸ்தியா பண்ணுவா? குழந்தைகள் தானே. லலிதாவோட நாம விஷேஷம் பாத்தாலும் கொஞ்சி விளையாடுபவள்னு அர்த்தம் வருது, இன்னொரு வகைல பார்த்தால் 'எப்போதும் சந்தோஷத்தை தருபவள்'னு வருது. கொஞ்சி விளையாடக் கூடிய பெண் குழந்தை எப்போதும் மனசுக்கு சந்தோஷத்தை தரத்தானே செய்யும்!! :) குழந்தேள் என்ன அவ்வளவு சுலபத்துல எல்லார்கிட்டையும் கொஞ்சி விளையாடுமா என்ன? யார் கிட்ட அதுக்கு மனசு லயிக்கர்தோ அவா கூடத்தானே களிக்கும். அதுனாலதான் இதை பாராயணம் பண்ணரோது அம்பாளை குழந்தையா நினைச்சு அவளோட விளையாடர மாதிரியான நிஷ்கபடமான மனசோட பாராயணம் பண்ணனும்!னு ஒரு விதி உண்டு.

பொதுவா சுந்தரினா ரூபவதினு அர்த்தம் வரும். ஆனா வெறும் ரூபலாவண்யம் எத்தனை நாளைக்கு நமக்கு சந்தோஷத்தை தரும். அப்படியே வச்சுண்டாலும் நிறையா பேர் பாக்கர்துக்கு லக்ஷணமாதான் இருக்கா, ஆனா குணம் இருக்கமாட்டேங்கர்தே! அப்ப எதை வச்சு தான் சுந்தரினு முடிவு பண்ணர்து?னு நமக்கு குழப்பமா இருக்கும். சில சமயங்கள்ல குழப்பமும் நல்லது தான். அப்பதானே நல்லதா பாத்து எடுத்துக்க முடியும். அப்ப யாரை தான் சுந்தரினு சொல்லர்து? யாரு ரூபவதியாவும் குணவதியாவும் இருக்காளோ அவா தான் சுந்தரி. ரெண்டும் சேர்ந்தாப்ல இருக்கும் ஆள் கிட்டர்து ரொம்ப கஷ்டமாச்சேனு அசடாட்டமா நாம முழிக்கவே வேண்டாம்..

அம்பாளுக்கு திரிபுர சுந்தரினு ஒரு பெயர் ரொம்பவும் ப்ரபல்யம். மூனு லோகத்துலையும் அவளே சிறந்த அழகி!னு அதுக்கு அர்த்தம். ரூபலாவண்யத்துல மட்டும் இல்லை குணத்துலையும் அவளே அழகி. சாக்தர்களுக்கு இவள் சரியான திருட்டு சுந்தரி! முதல்ல நல்ல பிள்ளையாட்டமா மனசுக்குள்ள வந்து ஒளிஞ்சுப்பா, அதுக்கு அப்புறம் மெதுமெதுவா சகலத்துலையும் வியாபிக்க ஆரம்பிச்சுடுவள். கடைசில அந்த சாதகன் லோகத்தோட கண்களுக்கு பித்து பிடிச்சவன் மாதிரி இருப்பான். வாஸ்தவத்துல பித்தனோட பித்துதான் அவனை பிடிச்சுருக்கு..:)தாயுள்ளத்தோட நம்மோட மனசை முழுசா திருடிண்டு போகர்தால இவள் சரியான திருட்டு சுந்தரி! :)



சுந்தரி...

விளையாடி முடிச்சதுக்கு அப்புறம் சாளவாய் வடியும் குட்டி வாயால் தரும் எச்சில் முத்தம் போல, அன்பர் என்பவர்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைகண்களே. அம்பாளை ஆராதனை பண்ணர்துக்கு ஒருத்தனுக்கு வாய்ப்பு கிட்டர்துனாக்க அது அம்பாளே மனசு வெச்சு குடுக்கும் ஒரு பொக்கிஷம். இந்த வரலெக்ஷ்மி விரத்தை அந்த ஒரு வாய்ப்பா கருதி அம்பாளை நிஷ்கபடமான பக்தியோட மஹாலெக்ஷ்மி தாயாரா ஆராதனை பண்ணி அபிராமி பட்டரும் சங்கரரும் சொன்ன எல்லா சம்பத்தையும் அம்பாளோட பிரஸாதமா நாம் பெறுவோமாக..

குறிப்பு - 2001 கோடை விடுமுறைல அடியேன் விரும்பி படித்த “தெய்வத்தின் குரல்” நினைவுகளில் கொஞ்சம் இங்கு வார்த்தையாக்கப்பட்டது.

25 comments:

  1. பண்டிகை காலத்தில் அபிராம பட்டரையும் ஆதிசங்கரரையும் இணைத்து சிறப்பானதோரு அம்பாள் பதிவு.... நன்றிகள்

    ReplyDelete
  2. இந்த நேரத்திற்கேற்ற பதிவு... உன்னோடது அப்புறம் இன்னொரு பிளாக்கர் மாதங்கி... உங்க அழகு தமிழை படிக்கவே ஒரு கூட்டம் வரும்னு தோணுது... அழகா எழுதி இருக்க... :)

    ReplyDelete
  3. அருமையான பதிவு. மனசுக்கு நிறைவாகவுள்ளது.

    ReplyDelete
  4. //ரூபலாவண்யத்துல மட்டும் இல்லை குணத்துலையும் அவளே அழகி. சாக்தர்களுக்கு இவள் சரியான திருட்டு சுந்தரி! முதல்ல நல்ல பிள்ளையாட்டமா மனசுக்குள்ள வந்து ஒளிஞ்சுப்பா, அதுக்கு அப்புறம் மெதுமெதுவா சகலத்துலையும் வியாபிக்க ஆரம்பிச்சுடுவள்.//

    //விளையாடி முடிச்சதுக்கு அப்புறம் சாளவாய் வடியும் குட்டி வாயால் தரும் எச்சில் முத்தம் போல, அன்பர் என்பவர்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைகண்களே.//

    ச்வீட்டான உவமை :)

    //அம்பாளை ஆராதனை பண்ணர்துக்கு ஒருத்தனுக்கு வாய்ப்பு கிட்டர்துனாக்க அது அம்பாளே மனசு வெச்சு குடுக்கும் ஒரு பொக்கிஷம்.//

    மொத்தத்தில் கண்பனிக்க வாசிச்சேன். ரொம்ப நன்றி தக்குடு. எல்லோருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஸகல ஸம்பத்தும் உனக்கும் கிடைக்க அம்பாள் அருள் புரியட்டும்!!!

    பக்திரசம் சொட்டும் பதிவு :-)

    ReplyDelete
  6. Lyricalஆ இருந்துது, boss! ரொம்ப அழகான வார்த்தை கோர்வை.... free flowing narration! எப்போதும் நடுப்ற ஒரு குட்டி கத சொல்லுவேலே-- இந்த போஸ்ட்-ல இல்லியே?

    ReplyDelete
  7. இன்னைக்குத்தான் வேறு ஒரு தொடர்பில் மஹா பெரியவாளது இந்தப் பகுதியைப் படித்தேன், இங்கும் படித்தேன்...பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. தக்குடு,

    ரொம்ப பிரமாதம் ! சதா சர்வ காலமும் அம்பாளை மட்டுமே நினசிண்டிருக்கும் சாதகர்களுக்கு தான் இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிட்டும்.

    ReplyDelete
  9. தோஹாவில ஒட்டகம் மேய்க்கிற வேலையில் இருந்து கொண்டு, வரலக்‌ஷ்மி நோன்பு கொண்டாட சுந்தரி பற்றி எழுதி அசத்தும் உங்களை உம்மாச்சி காப்பாத்தும். GOD BLESS YOU.

    ReplyDelete
  10. தக்குடு
    சமீபத்துல நீ எழுதினதுல இது தான் பெஸ்ட்.
    சில வருஷங்களுக்கு முன்னாலே கல்கில சுதா சேஷையன் எழுதின ஸ்ரீ லலிதா தொடரை ஞாபகப் படுத்தியது. அதிலும் அவர் இப்படிதான் ஒரு நாமாவை எடுத்துக்கொண்டு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதில சொன்னதை விளக்குவார். நாமாவின் அர்த்தம் தெரிந்ததும் அந்த ஸ்லோகம் மனதில் நன்றாகப் பதிந்தது. அந்த தொடர் புஸ்தகமாக வந்ததா என்று தெரியவில்லை.
    ஸ்ருங்கேரி சாரதாம்பாள், ஆசார்யாள் அணுக்ரஹமும், ஆசியும் உனக்கு கிடைக்கட்டும்.

    ReplyDelete
  11. நல்லா எழுதி இருக்கீங்க தக்குடு...

    ReplyDelete
  12. postum arumai. padangalum arumai! 2nd padathla ambigayin alankaram yaar kaivannam? ippave kalai kattiduthey!! sasisuga203.

    ReplyDelete
  13. ஒரு குட்டி 'க‌லாட்சேப‌ம்' கேட்ட‌து மாதிரி இருந்த‌து, இதைப் ப‌டித்த‌ போது. குட்டிச் சுட்டிக் குழ‌ந்தை வ‌ருண‌னை, ஊ..ம், அந்த‌ பாலைவ‌ன‌த்தில் தான் அதிக‌மாய் ஏங்க‌ வைக்கும் என அறிந்த‌வ‌ன் தான்.

    ReplyDelete
  14. அன்பு தக்குடு அம்பாஅளை அருமையாகக் கண்முன் நிறுத்தி அபிஷேகமும் செய்த மாதிரி இருக்கு,உங்கள்
    தேன் மாதிரி சரள நடைல சொன்ன இந்தப் பதிவு. மனம் நிறைவா பாலாவின் பட.ம்
    வெகு அழகு.தக்குடு நன்றிமா.
    vallimaa

    ReplyDelete
  15. ///அம்பாளை குழந்தையா தியானம் பண்ணர்து ரொம்ப செளகர்யமான விஷயம் தெரியுமோ! நன்னா அழகா வகிடுஎடுத்த கூந்தல், சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி, அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி, அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும், அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,குறு நகை செய்யும் குட்டி வாய்..... இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ! அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம். ///

    ரொம்ப அழகா இருக்கு அம்பாள் தரிசனம்.

    ReplyDelete
  16. தக்குடு, எங்காத்து குட்டி அம்பளுகெல்லாம் உன் எழுத்துக்கள் ரொம்ப புடிச்சிருக்கு. அதனால, உம்மாச்சி ப்ளோக்ல நிறைய எழுதுப்பா.

    ReplyDelete
  17. தக்குடு! உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வந்து படித்து பார்த்து நிறைவு செய்யவும்.

    ReplyDelete
  18. Dear All, thanks a lot for your wonderful comments & blessings :))

    ReplyDelete
  19. வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.

    இன்றைய பகிர்வில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்.

    நட்புடன்

    ஆதி வெங்கட்.

    ReplyDelete
  20. @ Aadhi venkat - வலைச்சர அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி மேடம்!!

    ReplyDelete
  21. மாத்தி மாத்தி கேள்வி கேட்டாக்க மேதாவிலாஸம் ஜாஸ்தி ஆகுமே தவிர ஆத்மானுபவம் ஒரு போதும் வாய்க்கப் போகர்து இல்லை./

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
    உம்மாச்சி காப்பாத்து.

    ReplyDelete
  22. நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ஓம்

    ReplyDelete
  23. தக்குடு,தங்களின் இந்த பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கேன் நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

    ReplyDelete