Thursday, March 31, 2011

செளரம்

இன்னிக்கி நாம பாக்கப் போகும் வழிபாடுமுறை செளரம். சூரியன் உம்மாச்சியை முழுமுதற் கடவுளா ஆராதனை பண்ணும் முறைக்கு செளரம்னு பேர். லோகத்துல உம்மாச்சி இருக்கார் இல்லைனு சொல்லறவா எல்லாரும் ஒத்துமையா ஒத்துக் கொண்டு கண்ணுல ஒத்திக்கும் ஒரு உம்மாச்சி யாரு?னு கேட்டாக்கா அது நம்ப சூரிய நாராயணர் தான்.



குதிக்கும் குதிரையுடன் உதிக்கும் செங்கதிரவன்

'கண்ணில் தெரியும் கடவுள்'னு இவரை தாராளமா சொல்லலாம். லோகத்துல நடக்கும் எல்லா விஷயத்துக்கும் எதாவது ஒரு வழில நம்ப சூரி உம்மாச்சியோட சம்பந்தம் இருக்கும். எந்த தேசத்துக்கு போனாலும் காத்தால எழுந்த உடனே தரிசனம் பண்ணர்த்துக்கு நம்ப கூடவே வரும் ஒரு உம்மாச்சியும் இவரே. சிலபேர் மணி பாக்கர்துக்கே நோக்கியா போனை தேடும் இந்த காலகட்டத்துல, சூரியன் உம்மாச்சிதான் ஒரு காலத்துல கடிகாரமாகவும் இருந்தார்னு சொன்னா நம்பமுடியுமா? கிழக்க உதிக்கும் நேரம் ப்ராதக் காலம், தலைக்கு மேல வந்து நின்னா மாத்யானிக காலம், மேற்கே போய் மறையும் நேரம் சாயங்காலம்னு வந்துண்டு இருக்கார். இடைகாடர்னு ஒரு சித்தர் சந்தியாவந்தனம் பண்ணும் போது அர்க்யம் குடுக்க வேண்டிய காலத்தை பத்தி சொல்லும் போது " காணாமல் கோணாமல் கண்டு கொடு!"னு சொல்லி வச்சுட்டு போயிருக்கார். கர்மானுஷ்டானங்கள் எல்லாத்தையும் தொலச்சவாதானே சித்தர், அவர் எதுக்கு சந்தியாவந்தனம் எனும் அனுஷ்டானம் பத்தி கவலைபடறார்னு எல்லாம் குதர்க்கமா ஆராய்ச்சி பண்ணாம ஒழுங்கா பண்ணினா நமக்குதான் ஷேமம்.


உதயகால சூரிய ஒளி கண்ணுக்கு நல்லது கிடையாது அதனால காணர்த்துக்கு முன்னாடியும், மத்தியான கால சூரியன் உஷ்ணம் ஜாஸ்தியா இருந்தாலும் போட்டோ காமிரா மாதிரி ஒரு துவாரம் வரும்படியா கையை வச்சுண்டு சூரியனை பாத்தாக்கா கண்ணுக்கு பலம், அஸ்தமன காலத்துல வரும் சூரிய ஒளி கண்பார்வைக்கு ஸ்ரேஷ்டமானதால கண்டு குடுக்க சொல்லி இருக்கா!னு விளாவாரியா தெரியாம நாம பண்ணினாலும் பலன் கிட்டாமல் இருக்காது.

ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!! அவர் ஒரு நல்ல ஞானியும் கூட, இல்லைனா ஆஞ்சனேயருக்கு குருனாதரா இருந்து பாடம் சொல்லி குடுத்து இருக்க முடியுமா! நவக்ரஹங்கள்ல இவர்தான் ப்ரதானமான மூர்த்தி. ராமாயணத்துல ஒரு இடத்தில் அகஸ்திய ரிஷி ராமனுக்கு சூரியன் சம்பந்தமான ஒரு உம்மாச்சி ஸ்லோகம் சொல்லி தருவார். அந்த உம்மாச்சி ஸ்லோகத்துக்கு ஆதித்ய ஹ்ருதயம்!னு பேர். யஜுர் வேதத்துல ஸூர்ய நமஸ்காரம்னு தனியா உண்டு, வித்வான்கள் அதை 'அருணம்'னு சொல்லுவா. ஆவணி மாதம் ஆதவனுக்கு உகந்த மாதம். ஆவணி ஞாயிற்றுக் கிழமைகள்ல ப்ராதக்காலத்துல இந்த அருணப்ரஷ்ணம் பாராயணம் பண்ணி நமஸ்காரம் பண்ணினா ரொம்ப நல்லது. அது பண்ண முடியாட்டாலும் ஆதித்யஹ்ருதயம் சொல்லி 12 நமஸ்காரம் பண்ணலாம்.



உதயகால பாஸ்கரன்

சூரி உம்மாச்சிக்கு உகந்த வர்ணம் சிவப்பு அதனால சிகப்பு நிற புஷ்பங்கள் அவருக்கு ரொம்ப ப்ரீதி, குறிப்பா சொல்லனும்னா செந்தாமரை கிடைச்சா ஸ்ரேஷ்ட்டம். கோதுமை அவரோட தான்யம் கோதுமைல மிதமான திதிப்பு போட்டு நெய்மணத்தோடு நல்ல மனதுடனும் பாயஸம் பண்ணி சமர்ப்பணம் பண்ணினா சந்தோஷமா வாங்கிப்பார்.

ஆரம்ப காலத்துலேந்து தூய்மையான மனஸோடையும் தேகத்தோடையும் ஆதித்யனை ஆராதனை பண்ணரவாளுக்கு , சுடர் மிகும் அறிவுடன் சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும். மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள பலபேரை ஒரே திசையில் வழி நடத்தி செல்லக் கூடிய தலைமை குணம் கிடைக்கும், நேர்மையான வழியை மட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்,புவியில் யாருக்கும் அஞ்சாத வைர நெஞ்சமும் கிட்டும், எடுத்த காரியத்திலிருந்து சற்றும் மாறாத மன உறுதி கிட்டும்.
நவகிரஹங்கள் பத்தி எதிகாலத்துல வரப்போகும் பதிவுல இன்னும் கொஞ்சம் விஷயமும் ஜாதக கட்டத்துல சூரியன் இருக்கர்துனால வரும் சாதக பாதகங்கள் & அபூர்வமான ஒரு யந்த்ரத்தோட படமும் பாக்கலாம் சரியா!!



தர்மபத்னிகள் சமேதராய்....

சூரியனோட உம்மாச்சி ஸ்லோகம் பாக்கலாமா இப்போ!!

//ஜயதி ஜயதி சூர்ய சப்தலோகைக தீபஹ
கிரணம் ருதித தாப ஸர்வ துக்கஸ்ய ஹர்த்தா
அருணகிரணகம்ய சாதிராதித்ய மூர்த்திஹி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாமி//

ஸ்லோகத்தோட பொருள் - ஏழு லோகங்களுக்கும் தீபஜோதியாய் இருப்பவரும்,எல்லா விதமான துக்கங்களை போக்குபவரும்,தேஜஸுடன் ஜொலிப்பவரும்,உன்னதமானவைகளில் எல்லாம் உன்னதமானவரும் ஆன பாஸ்கரனை நமஸ்கரிக்கிறேன்.

குறிப்பு - இந்த பதிவுடன் ஷட்தர்சனம் எனும் தலைப்பில் வந்த உம்மாச்சி பதிவுகள் பூர்ணம் அடைந்தது. வரும் காலங்களில் குட்டி குட்டி தலைப்புகளில் உம்மாச்சி & பாரம்பர்யம் சம்பந்தமான பதிவுகளை நாம் பார்க்கலாம்.

36 comments:

  1. பங்களூர்ல டொம்லூர் சூரிய பகவானைச் செவிச்சிருகிறீர்களா தக்குடு. பிரமாதமான கோவில்.

    சிரம காலங்களில் ஒன்பது தடவை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்லி எங்கள் மாஸ்டர் அறிவுறுத்தி இருக்கிறார்.
    சூரியன் கண்கண்ட தெய்வம்.

    ReplyDelete
  2. wow. great write up.

    //லோகத்துல உம்மாச்சி இருக்கார் இல்லைனு சொல்லறவா எல்லாரும் ஒத்துமையா ஒத்துக் கொண்டு கண்ணுல ஒத்திக்கும் ஒரு உம்மாச்சி யாரு?னு கேட்டாக்கா அது நம்ப சூரிய நாராயணர் தான்.//
    well said in thakkudu style

    ReplyDelete
  3. இடைகாடர்னு ஒரு சித்தர் சந்தியாவந்தனம் பண்ணும் போது அர்க்யம் குடுக்க வேண்டிய காலத்தை பத்தி சொல்லும் போது " காணாமல் கோணாமல் கண்டு கொடு!"னு சொல்லி வச்சுட்டு போயிருக்கார். //

    அப்படியா??? நவகிரஹங்களையும் கட்டுப்படுத்தி இருக்கார்னு படிச்சிருக்கேன். இது தெரியாதே. புதிய செய்தி. விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  4. ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!! அவர் ஒரு நல்ல ஞானியும் கூட, இல்லைனா ஆஞ்சனேயருக்கு குருனாதரா இருந்து பாடம் சொல்லி குடுத்து இருக்க முடியுமா! //

    ஸ்தித ப்ரக்ஞர்! :))))))))))

    ReplyDelete
  5. படம் அட்டஹாசமா இருக்கேனு நினைச்சேன், பெண்களூர்னு வல்லி சொல்லிட்டாங்க. பார்த்ததில்லை!

    ReplyDelete
  6. உங்க பதிவு படங்கள் எல்லாமே அட்டகாசம இருக்கு.

    ReplyDelete
  7. @ Geetha mami - //பெண்களூர்னு வல்லி சொல்லிட்டாங்க// mami, this is not bangalore photo.

    ReplyDelete
  8. O, OK, OK, அவங்க சேவிச்சிருக்கீங்களானு கேட்டதை, நான் தப்பாப் புரிஞ்சுண்டேன். நன்னி ஹை!

    ReplyDelete
  9. Udhaya kaala Baskaran photovum romba azhagu...Aadhithya hrudayam dhinamum 3 muraiyum, srama dhasaila 9 muraiyum jabichcha nalladhunnu kaetrukkaen.

    ReplyDelete
  10. Aditya hridhayam vaasichaa romba nalladhu. Denam naam kannula paakkara deivamnaa adhu sooriyandhaan. Nalla ommachi post

    ReplyDelete
  11. தக்குடு
    நான் ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு போயிட்டு வந்தவுடன் எதாவது நல்ல செய்தி கிடைக்கும்.

    \லோகத்துல உம்மாச்சி இருக்கார் இல்லைனு சொல்லறவா எல்லாரும் ஒத்துமையா ஒத்துக் கொண்டு கண்ணுல ஒத்திக்கும் ஒரு உம்மாச்சி யாரு?னு கேட்டாக்கா அது நம்ப சூரிய நாராயணர் தான்\

    ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!! அவர் ஒரு நல்ல ஞானியும் கூட, இல்லைனா ஆஞ்சனேயருக்கு குருனாதரா இருந்து பாடம் சொல்லி குடுத்து இருக்க முடியுமா! //

    நீ சொல்லிருக்கிற வரிகள் நிதர்சனம்.

    Einstein said that God didn't play dice with the universe . அவர் மட்டும் அல்ல எல்லா scientist உம் ஒத்துக்கிற ஒரே விஷயம் கடவுள், Even in seeming chaos, there's an order to things, a chain of events that leads inevitably
    to conclusions. People are links in the chain, but people don't control the events. Life has
    a pattern, even if we don't see it.

    சூரிய நாராயணர் படம், கம்பீரம்மாக இருக்கிறது எங்கே எடுத்தது, இடம் தெரிந்தால் சொல் I want to go there.

    ReplyDelete
  12. //ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!!//
    In a lighter vein, பின்னூட்டத்தைப் பத்தியோ , ஓட்டுகளைப் பற்றியோ , traffic rank ஐப் பற்றியோ கொஞ்சமும் கவலைப் படாமல் தினந்தோறும் எழுதித் தள்ளுகிறார்களே , அந்தப் பதிவர்களுக்கேல்லாம் inspiration இவர் தானோ!

    In a similar vein:
    You look at the transition you have made- picture one: He is in heaven, Lord of all that he purveys; picture two: He is down to earth, where we can see him; picture 3: He is in deep trouble just like any other married man on earth and he expects more and more people(devotees) to come and see him to give him the necessary confidence to carry on with his responsibilities as a Gruhastha! And see the compatible colour transition as well in his own image/form :-)))
    This is all for simple and pure fun and I have no intention of taking away/disturbing the divine aura of this blog/post. Thakkudu! You are free to delete this, if you feel you should!

    But I must say that I LOVE the first picture!

    ReplyDelete
  13. தக்குடு,
    ரொம்ப ரொம்ப அருமை! இன்னும் எழுதவும்!

    ReplyDelete
  14. தக்குடு
    ரொம்ப நல்ல பதிவு. ரொம்ப புண்ணியம் உனக்கு. நீ க்ஷேமமா இருக்கணும்.
    சௌந்தர்ய லஹரி முடிச்சுட்டு, அடுத்து ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராம நவமி சமயம் பதிவில் எழுதலாம்னு இருந்தேன். கொஞ்சம் பிஸி ஆக இருந்ததால் தாமதம் ஆகிறது. நீ தப்பாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பதிவில் விட்ட சிலவற்றை மேலும் விரிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன்.சின்ன சின்னதாக சில விளக்கங்கள். என் பதிவை விட உன் பதிவில் அதிகம் பேர் படிப்பதால் இங்கு போடுவது உசிதம் என அபிப்ராயப் படுகிறேன்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. காயத்ரி ஜெபமே நாம் சூரியனை நோக்கி த்யானம் செய்வது தான். இதன் அர்த்தம்
    I meditate upon the most adorable luster of the Sun God which is the source of inspiration for the functions of our intellect.
    நாம் சந்தியா வந்தனம் செய்யம் போது விடும் அர்க்கியம் மற்றும் காயத்ரி ஜபம் சூரியனுக்கே. பிரம்மோபதேஷம் பெற்றவர்கள் முடிந்த வரை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். மாத்யாநிகம் செய்யும் போது தக்குடு சொன்னது போல கை விரல்களை மடக்கி துளை மூலமாக சூரியனை நோக்கி செய்யும் சூரிய வந்தனம் மிகவும் முக்கியம். இன்றைய காலத்தில் நேரமின்மை காரணமாக ஜல அனுஷ்டானங்களை செய்ய முடியாவிட்டாலும் மானசீகமாக ஆவது செய்ய வேண்டும்.

    ReplyDelete
  17. சூரியன் ஏழு குதிரைகளை கொண்ட ரதத்தில் பயணம் செய்வார். அவரின் சாரதி பெயர் அருணன். சிவந்த நிறத்தை உடையவர். சந்த்யா காலத்து சிவந்த நிறம் இவரது தான். இவர் காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்தவர். கருட இனம். வினதை பொறுத்தால் பலசாலிகளான பிள்ளைகள் முட்டையில் இருந்து உடிப்பர் என்ற வரம் பெற்றவள். ஆனாலும் ஒரு முட்டையை ஆர்வக் கோளாறில் சீக்கிரம் உடைத்து விட அருணன் வருகிறார். அதனால் அவர் கால் ஊனம். வினதையிடம் தான் நிலைக்காக வருத்தப்பட்டு, இன்னொரு முட்டையை ஆவது பொறுக்க வேண்டும் என கூற அதில் இருந்து வந்தவர் தான் விஷ்ணுவின் வாகனம் ஆன கருடன். அருணனின் மகன்கள் தான் ராமாயணத்தின் ஜடாயு மற்றும் சம்பாதி.அருண ப்ரஸ்னம் என்ற பாராயணம் யஜுர் வேதத்தில் வருவது இந்த அருணனை குறித்தே. இங்கே சில அமெரிக்கக் கோயில்களில் ஞாயிறு காலை அருண பாராயணம் உண்டு. தை மாதம் ரத சப்தமியும் இந்த அருணனைக் குறித்தே.

    ReplyDelete
  18. ஜாதக ரீதியாக சூரியனின் பலன்களை நீ எழுவதாக உள்ளாய். எனவே அதில் சூரிய ஸ்தானம் நன்றாக உள்ளவர்களுக்கு அறிவு வளம், தந்தை உறவு, management skills பற்றி எழுத வேண்டும் என பிரியப்படுகிறேன்.

    ReplyDelete
  19. nice post thakkudu, Mr srinvas goplan's explanation also very nice.

    ReplyDelete
  20. hi Thakkudu,

    yen appa used to say Adtiya hrithyam daily...it will help us to faight against enimies..so no enimies will there if u read it...ithu yengaluku kan kanda unmai..

    pls keep posting such good blogs.

    cheers,
    'Tech ops' mami

    ReplyDelete
  21. @ கோபாலன் அண்ணா, ஆதித்ய ஹ்ருதயம் ராமருக்கு அகஸ்தியர் வழியாதான் உபதேசம் ஆனதுனு படிச்ச & கேட்ட ஞாபகம் அண்ணா! ஸ்லோகத்துலையே ப்ரமாணமும் இருக்கு!
    // தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
    உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி//

    உங்களோட அழகான விளக்கங்களும் அருமையா இருந்தது.

    ReplyDelete
  22. i really liked the view-- where u say, 'sun' is one thing accepted by both theists and atheists! good point!
    entha time la sun light is good- nu enakku eppovume romba confusion... ennaa- eppovume naan veyil la ponaa- enga amma keduthal nu solluvaa.. aanaa-- sun light venum-num solluvaa... so-- antha bit of info was useful! :)
    "adithya hrudayam"-- paththi niraiyaa paer osthiyaa solli kettirukken... 7 vayasu lukkaye kaththundurukkanaum, ithellaam...

    ithulula neenga sollirukkara niraiiyaa vishayam enakku theriyaathu, boss! so, to sum it up-- "a great read"...! :)

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. என் மதம் ஏழாவது!தாமதம்!
    கடைசியிலாவது வந்து சேர்ந்தேனே!
    மிக நல்ல பதிவு.
    தைத்த்ரீய ஆரண்யகத்தில் “அருணம்” என்றொரு பகுதி.தினமும் ,முடியாவிட்டால் ஞாயிறுகளில் ஜபித்து நமஸ்காரங்கள் செய்வது மிக...நல்லது!

    ReplyDelete
  26. என் மதம் ஏழாவது!தாமதம்!//

    சென்னை பித்தன், உங்க மதமும் ரொம்ப ஆவலைத் தூண்டும் மதமாகவே இருக்கு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ந.சு.

    ReplyDelete
  27. சூரியன் உம்மாச்சியை நானும் சேவிச்சுக்கறேன். அழகான பதிவுக்கு தக்குடுவுக்கு நன்றி.

    ReplyDelete
  28. பிரதயட்சமான் தெய்வமான சூரியனைப் பற்றி அற்பதமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.
    படத்தில் இருக்கும் சூரிய பகவான் சிலை பெங்களூரில் ஈகிள்டன் ரிசார்ட்ஸ் அருகில் இருக்கும் இந்த இடத்திற்குச் சென்று பார்த்து பிரம்மித்திருக்கிறேன்.
    மிக அருமையான இடம். கோல்ப் கிளப்பும் அருகில் இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  29. ஒற்றைச் ச்க்கரத் தேரும், ஏழு திசையிலும் திமிறும் ஏழுவர்ண குதிரைகளும் அற்புதமான காட்சி.

    ReplyDelete
  30. இன்று திரு.ஸ்ரீனிவாஸ் கோபாலன் அவர்கள் என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் கொடுத்துச் சென்றதால் நான் அவர் வலைப்பூவினில் நுழைந்து உங்களைப்பற்றி அறிய வாய்ப்புக்கிடைத்தது. சூரிய உம்மாச்சியைப்பற்றி மிக அருமையாக எளிமையாக சுலபமாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நான் இன்று முதல் உங்களைப்பின் தொடர இருக்கிறேன். அன்புடன், vgk

    gopu1949.blogspot.com

    ReplyDelete
  31. அண்ணா! இப்போதான் உம்ம பதிவுக்கு வர்றேன்.
    ரொம்ப நல்லா எழுதறேள்!

    உம்மாச்சி எல்லாம் உங்களுக்குக் கொடுக்கணும்னு
    ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்!

    அப்புறமா, 'உம்மாச்சி'னா என்ன அர்த்தம் தெரியுமோ?! இதைப் படிச்சா புரியும்!
    http://bakthicafe.blogspot.com/2005/07/blog-post_11.html

    ReplyDelete
  32. Very good blog sir. Venkat. Visit www.hellovenki.blogspot.comvenki.blogspot.com

    ReplyDelete
  33. Om Bhaskaraya Vidhmahe, Diva karaya Dheemahe
    Thanno Surya Prachodayath.... :!!!

    ReplyDelete