//மாதங்களில் நான் மார்கழியாகவும், ருதுக்களில் வசந்த ருதுவாகவும், வ்ருஷங்களில் அரச மரமாகவும்,ஸ்வீட் வகைகளில் திரட்டிப் பாலாகவும் நான் இருக்கிறேன்// - அப்பிடின்னு பெருமாள் சொல்லி இருக்கார். அதனால தானோ என்னவோ அவர் சம்பந்தமான இந்த பதிவு மார்கழி மாசத்துல அமையர்து!..:)இந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது. எப்ப பாத்தாலும் மணக்க மணக்க செண்ட்டை போட்டுண்டு பட்டு வஸ்த்ரம் கட்டிண்டு,கலர் கலரா பூமாலையை போட்டுண்டு இருப்பார்.
ஸ்ரீரங்கத்து தேவதையும் அவளோட ஆத்துக்காரரும்...:)
பெருமாள் உம்மாச்சியை முழுமுதற் கடவுளாக ஆராதனை பண்ணும் முறைக்கு ஸ்ரீ வைஷ்ணவம்!னு பேர். மத்த அஞ்சு ஆராதனைக்கும் இல்லாத ஒரு சிறப்பு 'ஸ்ரீ' அடைமொழி இதுக்கு உண்டு. பெருமாள் ஸ்வபாவமாவே ரொம்ப காருண்யமான மூர்த்தி! தங்கமான மனசு அவருக்கு! அப்பிடி எல்லாம் எல்லாரும் சொல்லுவா. சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்யும் மஹாலெக்ஷ்மித் தாயார் தான் அதுக்கு காரணம். வைஷ்ணவத்துல தான் தாயார்! தாயார்!னு கொண்டாடுவா, இல்லைனா நாச்சியார்!னு சொல்லி எஜமானி அம்மாவா ஆகிடுவா.
ஸ்ரீ வைஷ்ணவத்துல தாஸ்ய பாவம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தின்னே சொல்லலாம். அடியேன்! தாசன்! தாசானுதாசன்,ராமானுஜதாசன் அப்பிடின்னு எல்லாம் தன்னை சொல்லிப்பா. அதே மாதிரி மத்தவாளை கூப்பிடும் போது தேவரீர்! ஸ்வாமி! இந்த மாதிரி ரொம்ப அழகா கூப்பிடுவா.வேடிக்கையா ஒரு வசனம் உண்டு, வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம். உண்மையான ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் தன்னோட ஆச்சாரியனை பார்த்தாக்க அப்பிடியே வெட்டின மரம் மாதிரி நெடுஞ்சான் கிடையா விழுந்து சேவிப்பர்(சேவிக்கனும்!). தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்தம் உண்டாம், ஆச்சாரியனோட அனுக்கிரஹம் இல்லாத வரைக்கும் அடியேன் ஒன்னுக்கும் உதவாத தண்டம் அப்பிடிங்கர்து அதோட அர்த்தம். தாசன் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!ங்கர்து இன்னொரு அர்த்தம்.
ஸ்ரீ வைஷ்ணவத்தை பாசுரங்களால வளம் கொழிக்க வெச்சவா ஆழ்வார்கள், அவாள்ல ஒருத்தர் ஒரு தடவை திருப்பதி போய் எல்லாரும் கோவிந்தா! கோபாலா!சொல்லர்தை பாத்துட்டு இங்கையே ஒரு புல்லாக நேக்கு பிறவி கொடு பெருமாளே!னு வேண்டினாராம், அப்புறம் அச்சச்சோ! புல்லுக்கு குறைச்சலான ஆயுசுதானே உண்டு, அதுக்கு பதில் ஸ்வாமி புஷ்கரணில மீனா பொறந்தா உம்மாச்சி ‘ங்கா’ குச்ச ஜலத்துல நாமும் ‘ங்கா’ குச்சலாமேனு ஆசை பட்டு மீனா பொறக்கனும்!னு வேண்டினாராம், திருப்பியும் ஜலம் வத்தி போச்சுனா அங்க இருக்க முடியாதே!னு யோசிச்சுட்டு உம்மாச்சியோட கோவில் வாசல்ல கல்படியா ஆகனும்! கல்படினா அங்கேந்து நகராம சதாசர்வ காலமும் பாலாஜியை பாத்துண்டு இருக்கலாம்னு கடைசியா வேண்டுதலை உறுதி பண்ணினாராம். ராஜபரம்பரைல ஜனனம் பண்ணி பெரிய பெருமாள் பக்தர் ஆன குலசேகராழ்வார்தான் அவர்.
கஜேந்த்ர மோக்ஷ கதை நம்ப எல்லாருக்குமே நன்னா தெரியும், அதுல ஒரு விஷயம் நன்னா கவனிச்சு பாத்துருக்கேளா? முதலை ரூபத்துல வரும் அந்த கந்தர்வன் மஹாகெட்டிக்காரன்னு தான் சொல்லத் தோனர்து, அவனோட சாபம் போகர்துக்கு உம்மாச்சி ஆராதனை பண்ண ஆரம்பிச்சி இருந்தான்னா எத்தனை 1000 வருஷம் ஆகுமே அவனோட சாபம் நிவர்த்தி ஆக, ஆனா கெட்டிக்காரனா பரமபாகவதோத்தமரா இருக்கும் கஜேந்த்ரனோட காலை கெட்டியா கொஞ்ச நேரம் பிடிச்ச ஒடனேயே பெருமாளோட தர்சனம் & அவர் கையாலையே மோக்ஷமும் கிடைச்சுடுத்து.. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவத்தோட தாச பக்தியோட சிறப்பு. சரணாகதி அடைஞ்சவாளுக்கு பூலோகத்தில் நிதியும் வைகுண்டத்தில் கதியும் உண்டு.
கஜேந்த்ராழ்வார்...:)
வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்பவே மவுசு ஜாஸ்தி (நான் சொல்லலை, வேளுக்குடியார் சொன்னது). எத்தனையோ ஆழ்வார்கள் இருக்கா, சிரமப்பட்டு லொங்கு லொங்கு!னு எல்லா திவ்யதேசத்துக்கும் போய் ஆயிரக்கணக்குல பாசுர மழை பொழிஞ்சா, ஆனா நெறையா பேருக்கு அவாளோட அற்புதமான க்ரந்தங்களோட பேர் கூட தெரியாது. வில்லிப்புத்தூர்ல ஒரு பொம்ணாட்டி பாவாய்! பாவாய்!னு முப்பதே முப்பது பாசுரம் தான் பாடினா, அதுவும் ஆத்துல இருந்த மேனிக்கே, அவளோட திருப்பாவை தெரியாதவாளே லோகத்துல கிடையாது, கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!னு சொல்லிண்டு ஒரு பெரிரிரிய கூட்டமே இங்க கொடி பிடிச்சுண்டு வந்துடுவா....:)
பெருமாளையும் தாயாரையும் எப்போதும் மறக்காம சேவிக்கறவாளுக்கு என்ன கிட்டும்? திருத்துளாவத்தோட மணம் மாதிரி மனசும் புத்தியும் மனம் வீசும், தாஸ்ய பாவம் ஜாஸ்தி ஆக ஆக மனசுல உள்ள அஹங்காரம் எல்லாம் போய் ஸ்படிகம் மாதிரி சிந்தனை பிறக்கும், மன்மதனும் ரதியும் பூலோகத்துல ஜனனம் பண்ணி இருக்காளோ?னு மத்தவா சந்தேகப் படும் படியான வ்யாதி வெக்கை இல்லாத ரூப லாவண்யம் கிட்டும், எத்தனை விருந்தினர் வந்தாலும் சாப்பாடு போடும் படியான தயாள மனசும் அதுக்கு தேவையான தான்யமும் கிட்டும், குபேரனுக்கு பேரனோ!னு வியக்கும் படியான ஸ்ரீநிதி கிட்டும்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்!!..:)
இப்ப ஒரு உம்மாச்சி ஸ்லோகமும் அதோட அர்த்தமும் பாப்போமா?
//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹா கேசவம் ப்ரதி கச்சதி//
அர்த்தம் - ஆகாயத்துலேந்து விழும் அக்கம் எல்லாம் கடோசில சமுத்ரத்தை அடையர மாதிரி, உண்மையான பக்தியோடையும், பவ்யத்தோடையும் நாம பண்ணும் நமஸ்காரம் எல்லாமே கேசவனோட பாதங்களை போய் அடையர்து
Friday, December 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ரொம்ப அழகு படம் பதிவு எல்லாமே தக்குடு
ReplyDeleteசந்தடி சாக்குலே பொம்மனாட்டிகளையும் நன்னாவே கிண்டல் பண்றாய் நீ...:)
அன்புடன்
சுபா
அலங்காரப் ப்ரியரை உன் வார்த்தைகளால் அலங்காரம் பண்ணி விட்டாய் தக்குடு. ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பெருமாள் கோயிலில் தாயாரை சேவிச்ச பின்னாடி தான் பெருமாளை சேவிக்கணும். பிரதி வெள்ளிக்கிழமை செங்கமலத்தாயரையும் ஸ்ரீ வித்யா ராஜகோபாலனையும் சேவிச்சிருக்கேன்.
ReplyDeleteபிருந்தாவனத்தில் புல்லாய்ப் பிறவி தரவேணும் என்று ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாட்டு ஒன்னும் இருக்கு. ஜேசுதாஸ் பாடி எங்கூரு கோபாலனை இங்கே காமிச்சிருக்கா..
http://www.youtube.com/watch?v=GYX-x1KoSAk
சொல்ல மறந்துட்டேனே ... ஸ்லோகம் அர்த்தம் ரெண்டுமே ரொம்ப நன்னா இருக்கு. ;-)
ReplyDelete:-) good one Boss... enga oor aana polave irukke?
ReplyDeletethe 'aandaal' part- very good observation... :-D rangan keeps himself well- all the time! :D atha romba azhagaa ezhuthirukkel!
superb!
பெருமாள் அலங்காரப் பிரியர் . சிவன் அபிஷேகப் பிரியர் :)
ReplyDeleteஇன்னொன்னு உண்டு , வைஷ்ணவா கல்யாணத்தில், பெண்ணும் மாப்பிள்ளையும், ஒவ்வொருவரையும் எட்டு முறை நமஸ்காரம் பண்ணனும்னு சொல்லுவா.
ReplyDeleteGood post thakudu.
ReplyDeleteஎல்.கே நானெல்லாம் நாலு தரம்தான் சேவித்தேன் பா:)
ReplyDeleteதக்குடு என்னிக்குத் தாயாரை நினைச்சுண்டுட்டியோ
கட்டாயம் அவள் உனக்கு ஒரு துணையைக் கொண்டுவந்துவிடுவாள்.
அம்பாள் மட்டும் என்ன,நம் மாங்காட்டுக் காமாக்ஷி கண்களைப் பார்த்த பிறகு வேறு ஏதாவது நினைவுக்கு வருமா.
அற்புத மான தரிசனம் கொடுக்கும் ஸ்ரீயையும் அவள் தன் பர்த்தாவையும் நமஸ்காரம் செய்கிறேன் . நன்றி தக்குடு.
Nice post and fun as ever. And LK it is four times not eight times..
ReplyDelete@ LK - பதிவை போட்டுட்டு, "பெருமாளே! யாரும் ஒன்னும் சொல்லாம இருக்கனுமே!"னு ப்ரார்த்தனை பண்ணின்டு இருக்கேன், நீர் எதுக்குவோய் வாயை குடுத்து மாட்டிக்கறீர்! வைஷ்ணவ சிம்மங்கள் எல்லாம் வந்து போயிண்டு இருக்கா! ஜாக்ரதையா இருக்கனும்!...;)
ReplyDeleteஆஹா என்னரங்கரா இங்கே? பார்த்ததுமே பரவசமானேன் தக்குடு! படிச்சிட்டு விவரமா பதில் போடறேன்.
ReplyDeleteஇந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது. எப்ப பாத்தாலும் மணக்க மணக்க செண்ட்டை போட்டுண்டு பட்டு வஸ்த்ரம் கட்டிண்டு,கலர் கலரா பூமாலையை போட்டுண்டு இருப்பார்.
ReplyDelete<<>>>>
கஸ்தூரி திலகம்! அதான் கமகமன்னு வாசனை!
//ஸ்ரீரங்கத்து தேவதையும் அவளோட ஆத்துக்காரரும்...:)
ReplyDelete///
திவ்ய தம்ப்திகள் ஆச்சே! சேவையும் திவ்யம்! இந்தப்படமும் ! எப்படி தக்குடு புத்தாண்டுக்கு எங்க ஊர் உம்மாச்சியைப்பத்தி எழுதத்தோணித்து! ரியலி க்ரேட்!
// சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்யும் மஹாலெக்ஷ்மித் தாயார் தான் அதுக்கு காரணம்///
ReplyDeleteஆமாம் அகலகில்லேன் இறைப்பொழுதும் என்று அவர் திருமார்பில் உறைபவள்!
//வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம். உண்மையான //
ReplyDelete<<<<<<>>>>>இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! தேவரீர் திருமேனி பாங்கா?(நீங்க நலமா?)
அடியேன் குடிசைக்கு எழுந்தருளணும் தேவரீர் திருமாளிகைக்கு அடியேன் ஒருநாள் காலடி எடுத்துவைக்கணும்<<>இப்படி நல்லபடியாவும் பேசிப்பாப்பா தக்குடு:)
//தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்தம் உண்டாம், ஆச்சாரியனோட அனுக்கிரஹம் இல்லாத வரைக்கும் அடியேன் ஒன்னுக்கும் உதவாத தண்டம் அப்பிடிங்கர்து அதோட அர்த்தம். தாசன் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!ங்கர்து இன்னொரு அர்த்தம்.
ReplyDelete///
வேற அர்த்தம்னு நினைக்கிறேன் சரியா தெரில்ல கேட்டுட்டு வரேன்.
வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்பவே மவுசு ஜாஸ்தி (நான் சொல்லலை, வேளுக்குடியார் சொன்னது). ////
ReplyDelete<<>.ஓஹோ?:)இப்படிலலம் வேறயா?:)
கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!னு சொல்லிண்டு ஒரு பெரிரிரிய கூட்டமே இங்க கொடி பிடிச்சுண்டு வந்துடுவா....:)
ReplyDelete///
இல்லையா பின்ன! ஆண்டாள் புரட்சிக்கவிஞருப்பா:) அன்பும் ஆளுமையும் அவகிட்ட அதிகம்!
//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
ReplyDeleteஸர்வ தேவ நமஸ்காரஹா கேசவம் ப்ரதி கச்சதி//
அர்த்தம் - ஆகாயத்துலேந்து விழும் அக்கம் எல்லாம் கடோசில சமுத்ரத்தை அடையர மாதிரி, உண்மையான பக்தியோடையும், பவ்யத்தோடையும் நாம பண்ணும் நமஸ்காரம் எல்லாமே கேசவனோட பாதங்களை போய் அடையர்து .///
<>>>>>>>>>>>>>>>>>>>
அருமையாய் எழுதி இருக்கற அன்புத்தம்பி தக்குடுக்கு இந்தவருஷம் 16ம்பெற்று பெருவாழ்வு வாழ அக்காவின் ஆசிகள்!
பிகு...
இந்தப்பதிவில் கிளி அதிகம் கூவிட்டதுன்னு நினைக்கிறேன்! இத்தனை நாளாய் வராமலிருந்ததுக்கும் சேர்த்துவச்சி?:)
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஎல்.கே நானெல்லாம் நாலு தரம்தான் சேவித்தேன் பா:)
///
இதை மறந்துட்டேனே..வல்லிமா சொல்றது கரெக்ட்.நாலுதடவைதான் சேவிப்போம் கல்யாணங்களில் இப்போ அதுவும் இரண்டாகிவிட்டது யார் சொன்னா 8தடவைன்னு? அதெல்லாம் ஆசாரியர்முன்புதான் அதுவும் விசேஷ சம்பிரதாயங்களின் போதுதான் அப்போ எட்டென்ன நூத்தி எட்டும் ஆகுமாம்:)
நிஜத்தில் நான்கு முறைதான் தம்பதிகள் சேவிப்பார்கள். தம்பதி என்றால் 1+1 அல்லவோ.? நான்கு, எட்டாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்)
Delete//தக்குடு said...
ReplyDelete@ LK - பதிவை போட்டுட்டு, "பெருமாளே! யாரும் ஒன்னும் சொல்லாம இருக்கனுமே!"னு ப்ரார்த்தனை பண்ணின்டு இருக்கேன், நீர் எதுக்குவோய் வாயை குடுத்து மாட்டிக்கறீர்! வைஷ்ணவ சிம்மங்கள் எல்லாம் வந்து போயிண்டு இருக்கா! ஜாக்ரதையா இருக்கனும்
////
நான் சிம்மம் இல்லப்பா:) கிளிதான் சாது ஆனா கொஞ்சம் கத்தும் அப்பப்போ:)
//Anonymous said...
ReplyDeleteரொம்ப அழகு படம் பதிவு எல்லாமே தக்குடு
சந்தடி சாக்குலே பொம்மனாட்டிகளையும் நன்னாவே கிண்டல் பண்றாய் நீ...:)
அன்புடன்
சுபா
//
<<<<<<<<<<<<<<<<<அதானே
நேர்ல சாதுவா இருக்கே அப்படி புகழறே இங்கமட்டும் இப்படி ஏன்ம்ம்ப்பா?:):)
தாஸ்ய பாவத்தோடு ஆரம்பித்து பெருமாளிடம் எப்படி தம்மை ஒப்படைப்பது பற்றிய விளக்கம் ஒவ்வொரு வரியிலும் தெளிவாகிறது...
ReplyDeleteஆண்டாளின் பச்சைக்கிளியும் ஒவ்வொன்றை தெளிவாக சொன்னபிறகு..நிதானமாக பெருமாளையும் தாயாரையும் சேவித்து செல்கிறேன்.
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
Super blog...started with oomachi..that too perumal...so this year will be very good and you will get all the wealth.....may god bless you thakkudu!!!
ReplyDeleteSlogam nanaaa irunthathu...perumaala sevicha mukthi easya kidaikum.
'Tech ops'mami
தக்குடு, உம்மாச்சி பதிவிலேயே இதுதான் பெஸ்ட்! நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் பொம்மனாட்டிகள் பக்திதான் ஒசத்தியாக்கும்! :P
ReplyDeleteபுத்தாண்டில் நலமே பெருகட்டும்!
நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி தக்குடு!
ReplyDeletepros ellam padivu panniyachu. romba nanna irundadu. cons sonnal adikka varuva. velukudiyar Sivanai vambukku ezhukkamal upanyasam panradu illai. konjam kurugina manappanmai jasti than. aanaal Perumal namakku nanbar dhanpa.
ReplyDeleteDear Thakkudu, classic post, perumalai unga way of methodla decorate pannitel, thirattipalaa irukkennu perumal sonnaaroo??..:P Pandiyai cut panni shrt & sweetaa thakkudu-nu aayaachu poolarukku! roomba enjoy panni read panninom. Good post.
ReplyDeleteRanjani Iyer
srirangam Perumal oda Sethi utsava photo ethirpakala puliyotharai ku keela click pannum pothu. you describe well :)
ReplyDeletekeep writing :)
Nice post,I like the theertham they give in the perumal kovil,thirstya srirangam kovil kulla ponakooda thirumbi varappo poidum... hehe
ReplyDeleteNice post thakkudu... edhai quote panradhunnu therila...ellam nallaa irukku
ReplyDeleteதெரியாத சங்கதி நிறைய. ரசமான பதிவு. யானை படம் அழகு.
ReplyDeleteDear Friends, Thanks a lot for your wonderful comments.....;)
ReplyDelete@ fiery blaster - Neenga sollaramaathiri naan yethuvum ithu varaikkum kelvi padalai.
இப்ப தான் இந்தப் பதிவைக் கண்டேன்!
ReplyDelete//இந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது//
குளிச்சானா, குளிக்கலையா என்பது கூட இருக்குவங்க பிரச்சனை! Do u have any problem with it? வேணும்-ன்னா முகர்ந்து பார்த்துக்குங்க! :)
//பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!//
உண்மை தானே! காரைக்கால் அம்மையார் போல்!
இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்தா, பக்தி பண்ணுறோம்! துன்பமே தொடர்ந்து வந்தா, அப்போ பண்ணுவோமா? தேய்ந்தாலும் தேயத் தேயப், பக்தி வருமா? காரைக்கால் அம்மை என்னும் புனிதாவுக்கு அல்லவோ அந்த உள்ளம் வந்தது?
//வில்லிப்புத்தூர்ல ஒரு பொம்ணாட்டி பாவாய்! பாவாய்!னு முப்பதே முப்பது பாசுரம் தான் பாடினா//
மொத்தும் 30 + 143 = 173 பாசுரம் பாடினாள்!
//அதுவும் ஆத்துல இருந்த மேனிக்கே//
வீட்டுல இருந்தே எல்லாம் பாடலை! அனைவரையும் எழுப்பி, அழைத்துக் கொண்டு போய் தான் பாடினா! :)
//வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம்//
ReplyDeleteவேடிக்கை என்ற பெயரில், எள்ளலைத் தூவியதற்கு கண்டனங்கள்!
இப்படியெல்லாம் எழுதினா, அம்பியான ஒருவர், துள்ளிக் குதித்துக் கொண்டு வருவாரே! நகைச்சுவை என்ற பேரில் இப்படியெல்லாம் எழுதப்படாது என்ற கொள்கைக் குன்றுக்கு selective amnesia வந்து விட்டதா? :))
சும்மா சொன்னேன்! நகைச்சுவை என்ற பேரில், இப்படி அங்கதம் செய்வது, ஆன்மீகத்திலும் செய்யலாம்! தவறில்லை! காஞ்சிப் பெரியவர் அருளிய தெய்வத்தின குரலில், இதே எள்ளல்/அங்கதம் வரும்!
ஆனால் என்ன, நல்ல ஆன்மீகச் சொற்கள், பட்டை-கொட்டை என்று பொதுமக்கள் அங்கதமாகப் பேசும் போது, அதையும் இதே போல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்! விபூதியைப் பட்டை போட்டுட்டான்-ன்னு சொல்லாதீங்கோ என்ற அப்போ மட்டும் வேற அட்வைஸ் கொடுக்கப்பிடாது! :)
Andal Thayar: Please reckon Nachiar Thirumozhi (143 verses) together with Thiruppavai.
ReplyDeleteMy respect. Good writing.