Saturday, May 22, 2010

உம்மாச்சி காப்பாத்து

எல்லாருக்கும் நமஸ்காரம்! ரொம்ப நாளாவே ஸ்வாமி சம்பந்தமான விஷயங்கள் எழுதனும்னு ஒரு ஆசை உண்டு. என்னதான் மனுஷ்ய வாழ்க்கைல இருக்கும் மாயை பத்தி ஹாஸ்யமா தக்குடுபாண்டி ப்ளாக்ல எழுதிண்டு வந்தாலும் இதுதான் சாஸ்வதமானது அப்பிடிங்கர எண்ணம் மனசுல எப்போதுமே உறுதியா உண்டு.

இருந்தாலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஏற்கனவே ஆன்மீகத்தை பத்தி ரொம்ப பிரமாதமா எழுதிண்டு இருக்கா, இவாளுக்கு நடுல இந்த குழந்தை எழுதர்து அப்படிங்கர்து கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். திவா அண்ணா,மதுரையம்பதி அண்ணா,TRC சார்,கீதா மேடம்,குமரன் அண்ணா,KRS அண்ணா,பரவஸ்து அண்ணா இவாளுக்கு நடுல அடியேன் பேசர்து, திக்குவாய்க்காரன் கச்சேரி பண்ணர்துக்கு முயற்சி பண்ணர மாதிரிதான். காட்டுல மழை பெய்து முடிச்சதுக்கு அப்புறம் சிங்கம்,புலி,கரடி & யானை மாதிரி பெரிய ஆட்கள் எல்லாம் அவாளோட மேல இருக்கும் ஈரம் போகர்துக்காக வெயில்ல நின்னு உலர்திண்டு இருந்தாளாம், இதை பாத்துட்டு அங்க இருந்த ஒரு சுண்டெலி நாமளும் எதாவது உலர்த்தனுமேனு யோசிச்சு தன்னோட குட்டி வாலை போய் காய வச்சுதாம். அதை மாதிரி தக்குடுவும் ஸ்வாமி சம்பந்தமா எழுத வந்துருக்கு...;)இருந்தாலும் இவாளை மாதிரி பெரிய அளவுல எழுதாம என்னை மாதிரி குழந்தேளுக்கு புரியர மாதிரி குட்டி குட்டி கதை,ஸ்லோகம், நிகழ்ச்சிகள் எல்லாம் சமயம் கிட்டும் போது போடலாம்னு ஒரு எண்ணம். அதன் காரணமாக உதித்ததுதான் இந்த 'உம்மாச்சி காப்பாத்து'

கணபதி வந்தனம்





//கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி டுண்டி விக்னேஸ்வர பாத பங்கஜம்//

(அர்த்தம் - யானைமுகம் உடையவரும், பூதகணங்களாலும் சேவிக்கப்படுபவரும்,விளாம்பழம் மற்றும் நாவல் பழத்தை பிரியத்தோடு உண்பவரும், உமாதேவிக்கு பிரியமானவரும்,பக்தர்களின் சோகங்கள் அனைத்தையும் நாசம் செய்பவரும் ஆன டுண்டி விக்னேஷ்வரரின் பாத கமலங்களை வணங்குகிறேன்.)

32 comments:

  1. nalla todakkam. urupadiyana oru blog :)

    ReplyDelete
  2. பரிபூர்ண ஆசிகள் தக்குடு.

    ஜமாய் கோந்தே ஜமாய்!

    என்றும் அன்புடன்,
    இன்னொரு எலி 'வால்'

    ReplyDelete
  3. பரிபூரண ஆசீர்வாதங்கள்! ஆன்மீகம் பெரிய கடல்! எழுத எப்பவும் நிறைய இரூக்கும். அதுவும் குழந்தைகளுக்கு னா இன்னும் விசேஷம்! நிறைய எழுதுப்பா!

    ReplyDelete
  4. ஆஹா.. அருமையான விஷயம் தக்குடு! ஸ்வாமி உன்கூடயே இருப்பார். நன்னா எழுது.

    ReplyDelete
  5. ”என்னை மாதிரி கொழந்தைகளுக்கு” இதான் கொஞ்ச்ச்சம் அதிகம்! ஹீ ஹி..

    உன் முதல் ஃபாலோயர் நாந்தான்..

    ReplyDelete
  6. //உன் முதல் ஃபாலோயர் நாந்தான்.. //

    naanthan

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் தம்பியாரே....படம் அருமை, சுட்டுடேனே.. :-)

    ReplyDelete
  8. ம்ம்ம்ம்ம்ம்ம்????????? நன்னா எழுது.

    ReplyDelete
  9. என்னை மாதிரி குழந்தேளுக்கு புரியர மாதிரி எழுதறதுக்கு நன்றி தக்குடு :) வாழ்க!

    ReplyDelete
  10. ஜிங் ஜிங் ஜிங் ஜிங்
    ஜிங் ஜக்கா ஜிங் ஜிங்

    ஸ்ருதி மாறாம கரெக்டா இருக்கா !! ( எல். கே. ஸார் டு நோட்)

    கோபிகாதி ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா !!
    கோவிந்தா கோவிந்தா !!
    ஸ்ரீனிவாசா கோவிந்தா !!

    எத நினச்சு ஆன்மீகத்தை இந்த குழந்தை ஆரம்பிக்கிறதுன்னு
    எனக்கு நன்னா புரியறது.

    சீக்ரமேவ விவாஹ ப்ராப்திரஸ்து.

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  11. Beautiful pic...and thanks for your wonderful comment..

    ReplyDelete
  12. :)

    வாழ்த்துக்கள் தக்குடு!
    எதுக்கா?
    எல்லாத்துக்கும் தான்! :)
    //சீக்ரமேவ விவாஹ ப்ராப்திரஸ்து//

    ReplyDelete
  13. //என்னதான் மனுஷ்ய வாழ்க்கைல இருக்கும் மாயை பத்தி ஹாஸ்யமா தக்குடுபாண்டி ப்ளாக்ல எழுதிண்டு வந்தாலும் இதுதான் சாஸ்வதமானது அப்பிடிங்கர எண்ணம் மனசுல எப்போதுமே உறுதியா உண்டு.//

    ஹா ஹா ஹா

    //உம்மாச்சி காப்பாத்து!//

    அம்மாஞ்சி காப்பாத்து! என்பது அடுத்த வரியா? :)

    படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர் தக்குடு? "டுண்டி" விக்னேஸ்வரன்-ன்னு போட்டிருக்கீயளே? அப்படின்னா என்ன?

    //விளாம்பழத்தை பிரியத்தோடு உண்பவரும்//

    ஜம்பு = நாவற் பழம் அல்லவா?
    ஜம்புத் த்வீபம் = நாவலந் தீவு
    ஜம்புகேஸ்வரம் = நாவல் மரத்தடி ஈசன்

    ReplyDelete
  14. படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர் தக்குடு? "டுண்டி" விக்னேஸ்வரன்-ன்னு போட்டிருக்கீயளே? அப்படின்னா என்ன?

    //விளாம்பழத்தை பிரியத்தோடு உண்பவரும்//

    ஜம்பு = நாவற் பழம் அல்லவா?
    ஜம்புத் த்வீபம் = நாவலந் தீவு
    ஜம்புகேஸ்வரம் = நாவல் மரத்தடி ஈசன்
    May 24, 2010 2:55 AM






    ஏதோ நம்மாத்து குளந்தே ஆடிட் வேலயோட நிக்காம், அடுத்தாத்து பொண் மூக்கைப்பத்தி எழுதிண்டு இருந்தது, இப்ப ஆன்மீகத்தைப் பத்தி எழுதறதேன்னும் சந்தோஷப்படுவதை விட்டுட்டு,

    விக்னேச்வரன் அப்படின்னா என்ன ?
    ஜம்பூ த்வீபம் அப்படின்னா என்னா?
    கேள்வியெல்லாம் கேட்கறதா ?

    டூ மச்.

    உங்க கொஸ்சின் உங்களுக்கே பெள்ன்ஸ் ஆகி திரும்பி வரது. வந்துடுத்து. ( டிஸார்னர்ட் செக் போல ) ரெஃப்ர் டு ட்ராயர்.

    பதில் வேணும்னா, குமரன், மெளலி, திவா, கீதா மாமி அவாகிட்டே கேளுங்கோ.

    இப்படிக்கு,
    தக்குடு பாண்டி மாஸ்க் போட்டுண்டு வந்த‌
    சுப்பு தாத்தா.
    பின்.குறிப்பு.
    பொண்ணாத்துக்காறாள் பையனோட ஹாபி என்னன்னு கேட்டா. நான் என்னத்தைச் சொல்ல ?
    அப்பதான் பாத்து இந்த " உம்மாச்சி காப்பாத்து " வந்தது. அப்பாடின்னு நான் மூச்சு விட்டேன்.

    ReplyDelete
  15. //ஜம்பு = நாவற் பழம் அல்லவா?//

    கண்ணபிரான ஸார் !
    ஜம்பு பலம் என்றால் நாவல் பழம் தான். சந்தேகமே இல்லை. u r rite.
    விளாம்பழத்திற்கு உர்வாரகம்.

    த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டிவர்த்தனம்.
    உருவாரகம் இவ பந்தனாத் என்று துவங்கும் மஹா ம்ருத்ய்ஞ்ஜயத்திலும் உருவாரகம் இருக்கிறது.

    தக்குடு பாண்டி ஸார் ! எல்லாப்பதிவுகளிலும் கடைசியா இத சேத்துடுங்கோ !!
    ஈ அன்ட் ஓ. ஈ. தட் இஸ் எர்ரர்ஸ் அன்ட் ஒமிஷணஸ் எக்ஸ்பெக்டட்.

    கண்ணபிரான் ஸார் மாதிரி விஷயம் தெரிஞ்சவாளும் உங்க ப்ளாக்குக்கு வர்றா !!
    எழுதும்போது மனசிலே வச்சுண்டு எழுதணும்.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  16. அந்த ப்ளாக் பொண்ணு தேட (I mean கல்யாணம் பண்ணி வெயிங்கோனு கேக்க)... இந்த ப்ளாக் பின்னாடி வர்ற சந்ததிகளுக்கா.... எல்லாம் பிளான் பண்ணி தான் பண்றாங்க... சும்மா சொல்ல கூடாது... ஜோக்ஸ் apart ... good start brother. Keep up the good work

    ReplyDelete
  17. @ KRS anna - //கபித்த ஜம்பூ// கபித்த பழம்னா அது விளாம்பழத்தை குறிக்கும், ஜம்பூ நாவல்பழத்தை குறிக்கும், நாவல் பழத்தை சொல்லர்துக்கு விட்டுவிட்டேன். விளாம்பழத்தை யானை சாப்பிடும் அழகே தனி,விளாம்பழம் முதலில் ஒரு ஓடு போலவும் உள்ளே பழமும் இருக்கும், யானைக்கு அதை நாம் குடுத்தா அது அழகா அப்படியே முழுங்கிவிடும், அதோட கழிவுல பாத்தா அந்த ஓடு உடைபடாம அப்படியே இருக்கும், ஆனா உள்ள இருந்த பழம் மட்டும் இருக்காது. ஆச்சர்யமான ஒரு நிகழ்வு ஆகும்.

    @ சூரி மாமா - த்ரயம்பக மந்திரத்தில் உவமையாக சொல்லப்படுவது வெள்ளரிப்பழம் என்று அடியேனுடைய குருனாதர் சிருங்கேரி 'வேதப்ப்ரம்ஹ'மஞ்சுனாத பட் அவர்கள் சொல்லிபாடம் படிச்ச ஞாபகம். அதுவும் காய் கூட கிடையாது வெள்ளரிப்பழம்!னு அவர் சொல்லுவார். வெள்ளரிப்பழம்தான் நன்னா பழுத்ததுக்கு அப்புறம் அதுவா செடியிலேந்து மெதுவா விடுபடும், அதுபோல என்னுடைய ஜீவனும் அல்பகாரணங்களாலோ,வியாதியாலோ தேகத்தை விட்டு நீங்காம இயல்பான முறையில் உன்னுடைய திருவடியை அடயவேண்டும்!னு அதுக்கு அர்த்தம் சொல்லி படிச்ச நினைவு. உங்களோட கருத்தையும் கேட்டுக்க சித்தமா இருக்கேன்.

    ReplyDelete
  18. @ KRS அண்ணா - //படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர் தக்குடு? "டுண்டி" விக்னேஸ்வரன்-ன்னு போட்டிருக்கீயளே?// எந்த கோவில்னு எல்லாம் தெரியாது, கணபதி உபாசகர்களுக்கு என்னேரமும் மனதில் இருக்கும்/இருக்க வேண்டிய ரூபம் இதுவே. இதுக்கு மேல சொல்லர்துக்கு குரு அனுமதி இல்லை...:)

    டுண்டி விக்னேஸ்வரன் - காசியில் இருக்கும் கணபதியின் நாமா இதுவே, டுண்டி = தொந்தி, எனவே அழகான தமிழில் தொந்தி வினாயகர் என்றும் அழைக்கலாம். கணபதியின் 16 நாமாவில் லம்போதர் என்னும் நாமாவும் இதே அர்த்தம் தரும் லம்ப + உதரர் - லம்ப என்ற சமஸ்க்ருத வார்தைக்கு தொங்கிய, பெரிய போன்ற அர்த்தம் வரும். உதரம் = வயிறு . பெரிய வயிற்றுக்காரர் என்று நான் அழைக்கலாம்.

    மஹாகணபதி ஸஹஸ்ரனாமத்தில் 501 வது நாமாவாக வரும் இந்த பெயரின் மீது அடியேனுக்கு தனி காதல் மோஹம் பிரியம் ஆர்வம் பக்தி எல்லாம் உண்டு, ஏனென்றால் 10 வருஷம் குருனாதர் இல்லாத சமயங்களில் எல்லாம் அடியேன் தொட்டு பூஜை செய்த ஸ்வாமியின் பெயரும் அதுவே. நினைக்காத ஒரு ஐஸ்வர்யத்தையும் தரவல்ல அபார கருணாமூர்த்தி!

    ReplyDelete
  19. //த்ரயம்பக மந்திரத்தில் உவமையாக சொல்லப்படுவது வெள்ளரிப்பழம் என்று அடியேனுடைய குருனாதர் சிருங்கேரி 'வேதப்ப்ரம்ஹ'மஞ்சுனாத பட் அவர்கள் சொல்லிபாடம் படிச்ச ஞாபகம். அதுவும் காய் கூட கிடையாது வெள்ளரிப்பழம்!னு அவர் சொல்லுவார். வெள்ளரிப்பழம்தான் நன்னா பழுத்ததுக்கு அப்புறம் அதுவா செடியிலேந்து மெதுவா விடுபடும்//
    யூ ஆர் அப்சொல்யூட்லீ ரைட், தக்குடு. உருவாரகம் அப்படின்னா முதல் அர்த்தம் வெள்ளரி தான்.
    ஆனால், பெரியவா சொல்லும்போது, வெள்ளரிப்பழம் எப்படியோ அதே போல் தான் விளாம்பழமும்.
    முத்திப்போயிடுத்துன்னா, சட்ன்னு ஒட்டிலே கொஞ்சம் கூட ஒட்டிக்காம வந்துடுமாம்.

    அது போல, இந்த சரீரத்தை விட்டு, உயிரு பிரியப்போ, கொஞ்சம் கூட க்லேசம் இல்லாம, பந்தம் இல்லாம்
    போகணும். பகவானே ! த்ர்யம்பகனே ! உன்னை நான் பஜிக்கிறேன் அப்படின்னு சொல்றது.

    டுண்டிக்கிறதுக்கு அர்த்தம் தெரிஞ்சிண்டேன். நண்டி. இல்ல. நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  20. @ LK - கருத்துக்கு நன்றி!!..;)

    @ துளசி டீச்சர் - நீங்க புலி வாலுனு எல்லாருக்கும் தெரியும் டீச்சர்!!..:)

    @ திவா அண்ணா - உங்க ஆசிர்வாதம் இருந்தா போதும்!!..:)

    @ அனன்யா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!..;)

    @ ம'பதி அண்ணா - உங்க கிட்ட இல்லாத படமா நான் போட்டுடபோறேன் அண்ணா!!..:)

    @ கீதா பாட்டி - கருத்துக்கு நன்றி!!..;)

    @ ஹரினி - :)) நன்றி!!

    @ ஜெய்ஷ்ரீ அக்கா - சந்தோஷம் அக்கா!!

    @ சூரி மாமா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாமா!!

    @ sushma - Thanks for your nice words..;)

    @ - ஆரம்பமே வில்லங்கமானா இருக்கு...;)வாழ்த்துக்கு நன்றி அண்ணா!

    @ அடப்பாவி அக்கா - இங்கையும் புரளியை கிளப்பாதீங்கோ அக்கா!..:)

    ReplyDelete
  21. அன்பு தக்குடு இந்த அவதாரம் நல்ல பொருத்தமா இருக்கு. கணேஷ் னு பெயர் வைத்த பெரியவர்களின் சித்தப்படி முதல் உம்மாச்சி வந்துட்டார். தோப்புக்கரணம் போட்டு நமஸ்காரம்செய்து மேலும் படிக்கிறேன். அரிய விஷயங்களை எளிதாக அறியக் கொடுக்கணும்னு பிராத்திக் கொள்ளுகிறேன்

    ReplyDelete
  22. வினாயகரை கும்பிட்டு சாஸ்வத பயணத்தை ஆரம்பிச்சிட்டிங்க..எல்லாம் சிறப்பா இருக்கும்..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. Beautiful post and all the best for your new blog.

    ReplyDelete
  24. My best wishes to Ganesan and also fro, uma mami

    ReplyDelete
  25. @ valli amma - thk u amma!!..:)

    @ Padmanaban sir - danks sir!

    @ shanthi madam - thks for your wishes

    @ TRC mama & Uma mami - thak u!!!..:)

    ReplyDelete
  26. romba thanaddakam pola.
    anyway, expect more from this blog too. help me to teach the meaning of slokas for my kids

    ReplyDelete
  27. கணபதி வந்தனம் நாங்களும் செய்தோம்.

    வாழ்த்துக்கள் !

    கணபதி அருளால் இறை பணி தொடரட்டும்.

    ReplyDelete
  28. @ jeyashri akka - oru slokathukku oru mango icecream dekshinai tharanum okyaa??...:)

    @ Gomathi madam - Thanks amma!!..:)

    ReplyDelete
  29. தொப்பையப்பரை சுட்டு இங்கே போட்டிருக்கேன்... நன்றி தக்குடு.

    ReplyDelete