Thursday, July 22, 2010

ஷட்தர்சனம்/ ஆறு ரூபம்

எல்லாரும் வந்தாச்சா? ஆரம்பிக்கலாமா? ஹம்ம், தொப்பையப்பர் & குரு உம்மாச்சி எல்லாரையும் ப்ரார்த்தனை பண்ணியாச்சு, இனிமே கொஞ்சம் மேல பாக்கலாமா.

நம்பாத்துல (தக்குடு மாதிரி) ஒரு சமத்தான கோந்தை இருக்கு, ஆனா அது அவ்ளோ இஷ்டமா எல்லார்டையும் போகமாடேங்கர்து. பெரியப்பாட்ட பேச கூட மாடேங்கர்து, ஆனா சித்தப்பாட்டா நன்னா சிரிச்சு பேசர்து, அதோட மாமாட்டையும் நன்னா ஒட்டிக்கர்து. சரி போ! எப்பிடியோ நம்பாத்து மனுஷாட்ட கொழந்தை வாத்ஸல்யமா இருக்கே!னு அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரும் திருப்தி பட்டுப்பா. அதை மாதிரிதான் உம்மாச்சி விஷயமும், எல்லாருக்கும் எல்லா உம்மாச்சி கிட்டயும் மனசு லயிக்கர்து இல்லை. அதுக்கு அர்த்தம் அவாளை பிடிக்காதுன்னு எல்லாம் இல்லை, ஆனா இந்த உம்மாச்சிட்ட ஒரு இஷ்டம் உண்டு அவ்ளோதான்.

எப்படி சித்தப்பா பெரியப்பா எல்லாரும் வேற வேற மாதிரி தோனினாலும், அவா எல்லாருக்கும் நம்ப தாத்தாதான் அப்பாவோ, அதே மாதிரி எல்லா உம்மாச்சியும் ஒன்னுதான், ரூபம் தான் வேற வேற.

எதாவது ஒரு ரூபத்லையாவது கோழந்தேள் ப்ரியம் பண்ணமாட்டாளா?ங்கர நல்ல எண்ணத்துல தான் ஆதிசங்கர் உம்மாச்சி ஆறு விதமா உம்மாச்சி ஆராதனையை நமக்காக ஏற்படுத்தி தந்தார்.அதைதான் 'ஷட்தர்சனம்'னு சொல்லுவா (ஷண்மதம்னு சொல்லும் பழக்கமும் உண்டு, ஆனால் தக்ஷிணாம்னாய பீடத்தோட ப்ருதாவளியில் 'ஷட்தர்சன ஸ்தாபனாசார்ய'னு வார்த்தை ப்ரயோகம் இருக்கர்துனால அடியேனும் அதையே உபயோகிக்கிறேன்).

சங்கரர் குட்டியூண்டு பையனா காலடில இருந்த போது ஒரு நாள் பிக்ஷை எடுக்கப் போனாராம். அன்னிக்கி நல்ல த்வாதசி திதி. நேரா போய் ஒரு ஆத்து வாசல்ல நின்னுண்டு ‘மாதா பவதி பிக்ஷாம் தேஹி!’னு குரல் குடுத்தாராம். அவாத்துல இவருக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையாம், அவாத்து மாமிக்கு ஒரே அழுகையா வந்துதாம், ‘ஓஓஓ! இவ்ளோ அழகா இருக்கும் இந்த கோந்தைக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையே எங்காத்துல!’னு ரொம்ப வருத்தப்பட்டாளாம், அப்பரம் ஒசரத்துல கூடைல இருந்த ஒரு தக்குனூண்டு நெல்லிக்காயை கொண்டு போய் பிக்ஷாபாத்ரத்துல போட்டாளாம்.



சங்கரார்கு அவாளோட முகத்தை பாத்த மாத்ரத்துல விஷயம் புரிஞ்சு போய், உடனே மனசுல மஹாலெக்ஷ்மி உம்மாச்சியை ‘கனகதாராஸ்தோத்ரம்’ சொல்லி தியானம் பண்ணினாராம். அவாளும் ‘டஷ்ஷ்ஷ்!’னு வந்துட்டாளாம். ‘இவாளோட கர்மா இன்னும் தீரலையே கோந்தை! அப்பரம் எப்பிடி இவாளுக்கு ஐஸ்வர்யத்தை குடுக்க முடியும்?’னு கேட்டாளாம், அதுக்கு உடனே நம்ப சங்கரர் உம்மாச்சி, ‘அப்பிடி எல்லாம் நீங்க சொல்லக் கூடாது, தாயார் குடுக்கனும்னு நினைச்சா யாராலையும் அதை தடுக்க முடியாது, தானம் பண்ணனும் அப்பிடிங்கர இந்த நல்ல குணத்தை மனசுல வெச்சுண்டு இவாளுக்கு நீங்க அனுக்ரஹம் பண்ணித்தான் ஆகனும்!’னு கொழந்தை முகத்தோட கெஞ்சி கேட்டோனே, கருணையே வடிவான நம்ப மஹாலக்ஷ்மி உம்மாச்சியால ஒன்னுமே சொல்ல முடியலையாம், உடனே அவாம் முழுவதும் ஸ்வர்ண நெல்லிக்காய் மழை மாதிரி கொட்டிருத்தாம்.

சங்கரர் உம்மாச்சி ஜனனம் பண்ணின சமயம் ஒரு ஒழுங்கு இல்லாம எல்லாரும் அலைபாஞ்சுண்டு இருந்தா, அப்புறம் இவர்தான் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி அழகா ஆறு விதமா பிரிச்சு குடுத்தார்.

காணாபத்யம்
கௌமாரம்
சைவம்
வைணவம்
சாக்தம்
சௌரம்

இன்னிக்கி கணேச சதுர்த்திக்கு கோக்கட்டை(கொழுக்கட்டை),கிருஷ்ண ஜெயந்திக்கு அதிர்ஸம்,ரவாலாடு,முள்ளு தேங்குழல்,சக்கரச்சீடை,தேங்காசீடை, முக்கியமா பால் திரட்டிப்பால், ஹனுமத் ஜெயந்திக்கு வடை எல்லாம் நமக்கு கிடைக்கர்துக்கு அவர்தான் காரணம். அற்புதமான இந்த ஸனாதன தர்மத்தை காப்பாத்தி எல்லா உம்மாச்சிக்கும் ஹாப்பி பர்த்டே! சொல்லர்துக்கு காரணமான அவருக்கு நாம எல்லாருமே கடமை பட்டு இருக்கோம்.

வரக் கூடிய பதிவுகள்ல இந்த ஆறு விதமான ஆராதனை பத்தி கொஞ்சம் தகவலும் வழக்கம் போல ஒரு குட்டி உம்மாச்சி ஸ்லோகமும் சொல்லலாம்னு தக்குடு கோந்தை மனசுல நினைச்சுண்டு இருக்கு. உம்மாச்சி அனுக்ரஹத்துல நல்ல படியா வரணும். சரி, இந்த வாரத்துக்கான உம்மாச்சி ஸ்லோகம் & அர்த்தம் பாக்கலாமா?

//ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத்பாதம்
சங்கரம் லோக சங்கரம்//

ஸ்லோகத்தோட அர்த்தம் - வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின் ஆலயமாகவும், பரம கருணாமூர்த்தியாகவும் இருக்கும் சங்கரபகவத்பாதரை பணிகிறேன்.

சங்கரம் அப்பிடின்னா மங்களம்னு அர்த்தம், யாருக்கு மங்களம்? லோகத்துக்கே மங்களமாய் அமைந்தவர். மங்களம் அப்பிடிங்கர்து பொதுவான ப்ரயோகம், எப்பிடி எல்லாம் இருக்குன்னா? வித்யார்த்திகளுக்கு நல்ல கல்வியறிவு மங்களம், வியாபாரத்ல உள்ளவாளுக்கு தனம்தான் மங்களம், கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு ஸத்புத்ராதிகள் மங்களம், வயசானவாளுக்கு முக்திதான் மங்களம்.

சம்-கரோ-இதி சம்கரஹா = நன்மையை மட்டும் செய்பவனே சங்கரன்.

34 comments:

  1. ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லுகையில், "அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ:" என்பது வழக்கம். அதாவது, உள்ளுக்குள் சக்தியான அம்பிகை, வெளியுருவத்தில் சிவச் சின்னங்கள் அணிந்த சைவர், செயல்பாட்டில் மஹாவிஷ்ணு என்பது பொருள்.....நானும் பகவத்பாதரை நமஸ்கரிக்கிறேன்.

    ReplyDelete
  2. //ஆனால் தக்ஷிணாம்னாய பீடத்தோட ப்ருதாவளியில் 'ஷட்தர்சன ஸ்தாபனாசார்ய'னு வார்த்தை ப்ரயோகம் இருக்கர்துனால அடியேனும் அதையே உபயோகிக்கிறேன்). //

    சரி, சரி...புரியறது.. :)

    ReplyDelete
  3. //அன்னிக்கி நல்ல த்வாதசி திதி. நேரா போய் ஒரு ஆத்து வாசல்ல நின்னுண்டு ‘மாதா பவதி பிக்ஷாம் தேஹி!’னு குரல் குடுத்தாராம். அவாத்துல இவருக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையாம், அவாத்து மாமிக்கு ஒரே அழுகையா வந்துதாம்,//

    இந்த இல்லம் இன்றும் பராமரிக்கப்படுவதாகச் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
  4. //வரக் கூடிய பதிவுகள்ல இந்த ஆறு விதமான ஆராதனை பத்தி கொஞ்சம் தகவலும் வழக்கம் போல ஒரு குட்டி உம்மாச்சி ஸ்லோகமும் சொல்லலாம்னு தக்குடு கோந்தை மனசுல நினைச்சுண்டு இருக்கு. உம்மாச்சி அனுக்ரஹத்துல நல்ல படியா வரணும். சரி, இந்த வாரத்துக்கான உம்மாச்சி ஸ்லோகம் & அர்த்தம் பாக்கலாமா?//

    ஓ! பார்க்கலாமே!...குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்லுவா...ஆகவே இந்த தக்குடு குழந்தைக்கு கண்ணில் காண்பிச்சுட்டு (நைவேத்யம் செய்து) ப்ரசாதத்தை எங்களுக்குக் குடுத்துடணும் :)

    ReplyDelete
  5. காலக்ஷேபம் பிரமாதம். இந்த சின்ன வயசில உன்னோட எழுத்து அபாரம்

    ReplyDelete
  6. //உள்ளுக்குள் சக்தியான அம்பிகை, வெளியுருவத்தில் சிவச் சின்னங்கள் அணிந்த சைவர், செயல்பாட்டில் மஹாவிஷ்ணு //


    சரி, சரி...புரியறது.. :)))

    ReplyDelete
  7. கதையைச் சொல்ல ஆரம்பிங்கோ 'பா'கவதரே!

    ReplyDelete
  8. Super post! aana ungala kozhanthainu sollikarathu thaan thaaaaaaaanga mudiyala! :P

    ReplyDelete
  9. மொழி குழந்தைக்காவும் இல்லாம பெரியவங்களுக்காகவும் இல்லாம .... கொஞ்சம் இடிக்கறாப்போல இருக்கு! ஒரு வேளை இது குழந்தை மாதிரி இருக்கிற பெரியவங்களுக்கா? :-)))))

    ReplyDelete
  10. @ Tiva anna - //ஒரு வேளை இது குழந்தை மாதிரி இருக்கிற பெரியவங்களுக்கா// correctaa சொன்னேள்...:))

    ReplyDelete
  11. ம்ம்!! நான் ஷட் தர்சனம்னா 6philosophies of hinduism நு நினைச்சேன் சாங்க்ய, யோக, ந்யாய, வைசேஷிக, பூர்வ மீமாம்ச, வேதாந்தனு (உத்தர மீமாம்ஸ) ஆறுனு நினைச்சேன். நீங்க சொல்லறது FAITH இல்லையா? 2ம் ஒண்ணா?

    ReplyDelete
  12. நல்ல காரியம் ஆரம்பிச்சு அழகா நடத்திண்டு போற பெரிய சின்னக் குழந்தை தக்குடுவுக்க்கு ஆசிகள்,.
    @தம்பி வாசுதேவன், நான் வயசில(மட்டும்) பெரியவ என்று சொல்லிக்கறேன்:)

    ReplyDelete
  13. நல்ல பதிவு.... Good job...keep it up
    (ஆனா உன்னை குழந்தைன்னு சொன்னது மட்டும் ஒத்துக்க மாட்டோம்....கரெக்ட் தானே ஹரிணி...)

    ReplyDelete
  14. //இன்னிக்கி கணேச சதுர்த்திக்கு கோக்கட்டை(கொழுக்கட்டை),கிருஷ்ண ஜெயந்திக்கு அதிர்ஸம்,ரவாலாடு,முள்ளு தேங்குழல்,சக்கரச்சீடை,தேங்காசீடை, முக்கியமா பால் திரட்டிப்பால், ஹனுமத் ஜெயந்திக்கு வடை எல்லாம் நமக்கு கிடைக்கர்துக்கு அவர்தான் காரணம்//

    :)
    இவ்வளவு மங்களங்களையும் அடியேன் சங்கரனுக்கு கிடைக்கச் செய்தவரா! ஆகா! சம்-கரோ-இதி சங்கரஹா!

    ஷட் தர்சன ஸ்தாபனாசார்ய
    அனு விருத்தி பிரசன்னாச்சார்ய
    ஆதி சங்கரர் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  15. வாழ்கநீ எம்மான் இந்த
    வேதநல் தர்மம் தன்னில்
    தாழ்வுற்று வெறுமை மிஞ்சி
    தர்சனம் தவறிக் கெட்டுப்

    பாழ்பட்டு நின்றதாம் ஓர்
    பாரத தர்மம் தன்னை
    வாழ்விக்க வந்த வாழ்வே
    சங்கராநீ வாழ்க வாழ்க!

    //அப்புறம் இவர்தான் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி அழகா ஆறு விதமா பிரிச்சு குடுத்தார்//

    வியாசர் ஒன்றை நாலாக்கினார்!
    சங்கரர் ஒன்றை ஆறாக்கினார்!
    -ன்னு சொல்வது மரபு!

    ஷண்மத ஸ்தாபகர் என்று சங்கரர் கொண்டாடப்படுவது மரபு வழியிலா? இல்லை ஷண்மதம் என்று முறையாக வகைப்படுத்தி, நூல் ஏதாச்சும் சங்கரர் எழுதி இருக்காரா? என்று அறிய ஆவல்! தக்குடுக் குழந்தை தெளிவு படுத்த வேணும்! :)

    ReplyDelete
  16. //வித்யார்த்திகளுக்கு நல்ல கல்வியறிவு மங்களம்
    வியாபாரத்ல உள்ளவாளுக்கு தனம்தான் மங்களம், கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு ஸத்புத்ராதிகள் மங்களம்//

    தோடா...
    அப்ப கூட, கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு, "கணவன் மங்களம்"-ன்னு சொல்ல வருதா பாருங்க! "ஸத்புத்ராதிகள் மங்களம்"-ன்னு தான் சொல்றான் இந்த தக்குடு! :)))

    இதுல இருந்து, தக்குடு பற்றி தெரிய வருவது என்ன? என்பதை அவரவர் அறிந்த தகவல்களோடோ/வதந்திகளோடோ, சபையில் தாராளமாக எடுத்து வைக்கலாம் என்பதைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்! :)

    ReplyDelete
  17. பாலகுமாரன் அவர்களின் காலடித்தாமரை மற்றும் கூடு புத்தகங்கள் மூலம் ஆதிசங்கரரின் ஆன்மீக பணிகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. சற்று நாட்களுக்கு முன் கோவைக்கு சென்ற சிறு இடைவெளியில் சாராதாம்பாள் கோவிலில் நன்றிப்பெருக்கோடு சங்கரரை தரிசித்து வந்தது மிக திருப்தியாக இருந்தது. இன்று தக்குடுவிடம் சங்கர்ரின் கதாகலாட்சேபம் கேட்பது சிலிர்ப்பாக இருக்கிறது..அவர் ஆறு மதங்களை ஸ்தாபித்து ஒழுங்கு படுத்தியதை சொன்னவிதம் அருமை..ப்ரபஞ்ச ஒருங்கிணைப்பு அத்வைத தத்துவத்தை அருளிய மஹான் எல்லார்க்கும் அருள்புரியட்டும்.

    ReplyDelete
  18. Like! Like!!(ummachi indha maama thaan kuzhandhainu poi solrar!! engala kaapaathu!!)

    ReplyDelete
  19. தம்பி
    அது கணாபத்யம் தானே ?? எழுத்துப் பிழையா ??

    ReplyDelete
  20. எல்லாம் சரி அந்த குழந்தை யாரு ?? அம்பியோட பையனா?? உன்னை குழந்தைன்னு சொன்னா உம்மாச்சி கண்ணை குத்தும்

    ReplyDelete
  21. @ ம'பதி அண்ணா - ஒரு அருமையான ஆன்மிகப் பதிவர் இந்த பதிவுக்கு வந்தது அடியேன் செய்த பாக்கியம்! நீங்கள் சொல்வது சரியே!

    என்ன புரியற்து??..:))

    //இந்த இல்லம் இன்றும் பராமரிக்கப்படுவதாகச் சொல்லுகிறார்கள்// ஆமாம் இன்னும் அவாளோட பரம்பரைல வரவாளுக்கு இது சம்பந்தமா ஒரு குடும்பப் பெயரும் உண்டு.

    உங்களை மாதிரி பெரியவா ஆசிர்வாதத்துலதான் வண்டி ஓடிண்டு இருக்கு...:)

    @ ஜெய்ஷ்ரீ அக்கா - சந்தோஷம்பா!! தக்குடு கோந்தைனு நீங்களாவது ஒத்துன்டேளே அது போதும்!...;)

    @ அம்பி அண்ணா - கலக்கிட்டைடா அண்ணா!!..:))

    @ துளசி டீச்சர் - ஆரம்பிச்சாச்சு!!..:))

    @ ஹரிணி - நன்னிஹை & :)))

    @ ஜெய்ஷ்ரீமா - வாங்கோமா! இரண்டும் வேற வேறனு தான் நினைக்கிறேன். எதுக்கும் விஷயம் தெரிஞ்ச நம்ப மதுரைகாரா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்...:)

    @ வல்லி அம்மா - உங்க ஆசிவாதம் இருந்தா போதும் வேற என்ன வேனும் இந்த குழந்தைக்கு??..:)

    @ அடப்பாவி அக்கா - அடைப்புக்குறிக்கு வெளில சொன்னதை மட்டும்தான் நான் வாசித்தேன்....:))

    ReplyDelete
  22. @ KRS அண்ணா - 'பாசுரப் புயல்' நம்ப கடை பக்கம் வந்த மாதிரி இருக்கு??..;) நல்வரவு!

    //ஷண்மதம் என்று முறையாக வகைப்படுத்தி, நூல் ஏதாச்சும் சங்கரர் எழுதி இருக்காரா? என்று அறிய ஆவல்!// எனக்கு அவ்ளோ விஷயம் எல்லாம் தெரியாதே அண்ணா! இங்க வரவா யாராவது பதில் சொன்னாதான் உண்டு. கீதா மேடம் ஒரு வேளை பதில் சொல்லலாம்.

    ஸத்புத்ராதிகள் வரணும்னா ஸத்புருஷன் மூலமாதான் வரமுடியும்!!...:))

    @ பத்பனாபன் சார் - வாங்கோ சார்! கருத்துக்கும் ஆசிவாதத்துக்கும் நன்னிஹை!..:)

    @ VGR - நன்றி...:)

    @ பொற்கேடி அக்கா - :)))

    @ LK - ///அது கணாபத்யம் தானே ?? எழுத்துப் பிழையா ??// கணபதியே முழுமுதற்பரம் பொருள். ஓங்கார வடிவினனாக அவரை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது காணாபத்யம். இதனை கணாபத்யம் எனவும் வழங்குவர். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  23. hm

    appada eppdio thedi kondupidichu vanthuvitena..

    konjam kudika Narasus coffee konduvango...

    Anna ungalkuku eppo kalyam anathu enkita collavey ellaiey..kolanthainu potu erukkel???

    ennavo nalathu nadantha sari..

    varatuma...

    eppadiku
    thakaduvin
    unmai rasigan
    siva

    ReplyDelete
  24. Thakkudu, neenga kutty kolanthaithaannu naan agree pannareen,sariyaa!!..:) mahalakshi ummachi dasssshu!nu vanthaalaa??..:)LOL what a sweet narration thakkudu!that sanadana darma video was amazing. yellarum paathaalaanu therilai..:( so i will get 6 more ummachi slokam, ivloo azlakaa slokam solli thanthaa yaarthaan learn pannikka maataa!!..:) my amma told me to convey her best wishes. keep it up!

    Ranjani Iyer

    ReplyDelete
  25. சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு உங்க" கதாகாலட்ஷேபம்"

    ReplyDelete
  26. இன்னிக்கு ஒரு குழந்தை எவ்வளவு அழகா டீவில கதா காலஷேபம் பண்ணிச்சு ... அதுதான் குழந்தை.. நீ இல்ல

    ReplyDelete
  27. enakku intha aadi shankarar katheleye romba pidichcha katha padma paadar mela narasimhar vanthu kaapaalikarkaloda fight pannina kattam thaan..

    excellent thakkudu! intha vishayangalellaam ungalukku therinjirukkarathey aachcharyam.. romba paer solrathilla itha pola vishayangalellaam kozhanthailukku.. romba konjam perukkey ithellaam intha kaalaththla therinjirukka chance irukku..

    ReplyDelete
  28. கஷ்டமான விஷயத்தை சுலபமாகச் சொல்லும் தக்குடுவுக்கு நன்றி. கனகதாராஸோஸ்த்தரமா இல்லை கனகதாராஸ்தவமா.தங்கமழைவைபவம்தான்சரின்னு படறது.
    @திவா அண்னா நீங்க சொல்லுங்கோ

    ReplyDelete
  29. @கேஆர்ஸ் தக்குடு பத்தி சொல்லரதுக்கு ஒன்னுமே இல்லை. தங்கமான பையன். இந்தியாவுக்கு வரதே அம்மா, அப்பா, அண்ணா, மன்னி, குழந்தை, திராசா இவர்களை பாக்கரதுக்கு மட்டுமே வரான். வேறு எதுக்கும் இல்லை. நம்புங்கோ சாமி.

    ReplyDelete
  30. @ சிவா - வருகைக்கு நன்றி!...:))

    @ ரஞ்ஜனி - //neenga kutty kolanthaithaannu naan agree pannareen,sariyaa!!..:) // ஒரு குழந்தைக்குத்தான் இன்னொரு குழந்தையை அடையாளம் தெரியும்!!!...:) ஆமாம், உங்களுக்கு 6 உம்மாச்சி ஸ்லோகம் கிட்டும்..:) // ivloo azlakaa slokam solli thanthaa yaarthaan learn pannikka maataa!!..:) // சந்தோஷம்பா!! உங்க sweeeeet அம்மாவுக்கு என்னோட நமஸ்காரத்தை சொல்லுங்கோ சரியா!...:)

    @ சந்த்யா மேடம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!..:)

    @ LK - :))

    @ மாதங்கி - வாங்கோ மாதங்கி! ஆமாம் இப்பொ எல்லாரும் 'பாபா ப்ளாக் ஷிப்!' தான் சொல்லிதரா...:( எனக்கு இந்த கதை எல்லாம்தான் தெரியும்...:))

    @ TRC சார் - ஆசிர்வாதத்துக்கு நன்னிஹை!! உங்களுக்கு எந்த பேர் பிடிக்கர்தோ அப்பிடியே வச்சுக்கலாம்...:) நைசா கிண்டி விடும் வேலையை ஆரம்பிக்கரேளே மாமா!!...:)

    ReplyDelete
  31. நல்ல ஆரம்பம் .... அப்படியே கொண்டு போங்க ( ஆன்மீக உலகத்துக்கு )...

    ReplyDelete
  32. உம்மாச்சியும் ஒன்னுதான், ரூபம் தான் வேற வேற.

    thank

    ReplyDelete
  33. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete
  34. neraiya post miss pannitenonnu nenaichen..romba illai..onnu dhan.. Nice work !

    ReplyDelete