பிள்ளையார் உம்மாச்சியை அதிதீவிரமாக ஆராதனை செய்யும் சம்ப்ரதாயத்துக்கு காணாபத்யம்னு ஆதிசங்கரர் பெயர் வெச்சார். கணாபத்யம்நும் சொல்லலாம். கணாபத்யம் = கணம் + அதிபத்யம் . எல்லா கணங்களுக்கும் அதிபதி. கணபதி உம்மாச்சியோட சான்னித்யம் க(Ga) அப்படிங்கர அக்ஷரத்துல ஸ்திரமா உண்டு. அதனால 'காணா'ங்கர அக்ஷரத்துக்கு அதிபதி = காணாபத்யம். அதனால தான் தொப்பையப்பருக்கு முழுசும் ககார சப்தத்திலேயே ஆரம்பிக்கர மாதிரியான ‘ககார’ ஸஹஸ்ர நாமம் ரொம்ப விஷேஷமானது.
(எட்டு வருஷமா தக்குடு பூஜை பண்ணின உம்மாச்சி)
எல்லாருக்குமே பிடிச்ச ஒரு உம்மாச்சி இந்த கணபதி. காரணம் என்னனா, இவர் ரொம்ப எளிமையாவர். ரயில்வே ஸ்டேஷன்ல ‘ரயில்வே வினாயகர்!’ங்கர பேர்லையும், பஜார்ல ‘பஜார் வினாயகர்!’ங்கர பேர்லையும், சிவகாசில ‘பட்டாசு வினாயகர்!’ங்கர பேர்லயும் எல்லா இடத்துலையும் உக்காசுண்டு இருப்பார். சின்னக் கொழந்தேளுக்கு எல்லாம் பிடிச்ச மாதிரி யானை முகம் இவருக்கு, சும்மா ஆத்தங்கரை ஓரத்துல வளரும் எருக்கம் பூ, அருகம் புல் போட்டாலே இவருக்கு போதும். சின்னக் குழந்தையாட்டமா அவல்,கடலை,கல்கண்டு,பொரி இதை குடுத்தாலே சந்தோஷப்படக் கூடிய ஒரு குட்டிக் குழந்தை.
கணபதி உபாசனைல ஒளவையார் பாட்டி ரொம்ப முக்கியமானவானு சொல்லலாம். நித்யம் கணபதி உம்மாச்சி பூஜை பண்ணாம அந்த பாட்டி மம்மு சாப்ட மாட்டாளாம். பூஜையும் சும்மா சாதாரணமா எல்லாம் இருக்காது. நன்னா அழகா பூஜா விதானப்படி பண்ணுவாளாம். பூஜைல உக்காசுண்டாச்சுன்னா வேற எதை பத்தியும் யோசிக்கமாட்டாளாம். நம்பாத்துல கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சு ஒரு கோந்தை பொறந்ததுன்னா அந்த அம்மா எவ்ளோ பாசத்தோட அதை பாத்துப்பா, அதை மாதிரி இந்த பாட்டியும் மெய்மறந்து பூஜை பண்ணுவாளாம். பாட்டியோட பூஜையோட விஷேஷமே உம்மாச்சிக்கு நிவேத்யம் பண்ணும்போதுதான். கோக்கட்டை,அவல்,பொரி,அப்பம் எல்லாம் வெச்சு நிவேத்யேம் பண்ணும் போது ‘டஷ்ஷ்ஷ்ஷ்!’னு பிள்ளையார் உம்மாச்சி பிரசன்னமாகி பக்கத்துலையே உக்காசுண்டு கையை நீட்டி நீட்டி வாங்கி சாப்டுவாராம்.
ஒரு நாளைக்கு ஒளவையார், பிள்ளையார் உம்மாச்சி பூஜை பண்ணிண்டு இருக்கும் போது ரிஷிகள்,சித்தர்கள் எல்லாரும் நடையும் ஓட்டமுமா போய்ண்டு இருந்தாளாம். ஒளவையார் அதை எல்லாம் கவனிக்கவே இல்லை. ஒரு ரிஷி மட்டும் சும்மா இருக்காம, ‘என்ன ஒளவை!! கைலாசத்துக்கு நீ இன்னும் கிளம்பலையா? பரமேஷ்வரனோட ஆனந்த நடன தரிசனம் நோக்கு வேண்டாமா?’னு கேட்டாராம். அவர் கேட்டதுக்கு அப்பரம் தான் ஒளவைக்கு ஞாபகமே வந்ததாம். ‘நீங்க போய்ட்டு வாங்கோ! நான் இப்பதான் பூஜையே ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் அந்த புள்ளை வேற சாப்ட வரனும், அவன் மெதுவாதான் சாப்டுவான் பாவம், அவசரபடுத்தினா அவனோட தொண்டைல போய் மோதகம் அடச்சுக்கும்!’னு சொல்லிட்டு பூஜையை தொடர்ந்து பண்ணினாளாம்.
(கணபதி யந்திரம்)
சொன்னாளே தவிர மனசுக்குள்ள சிவன் உம்மாச்சியோட அபூர்வமான நடனத்தை பாக்கனும் ரொம்ப ஆசையா இருந்ததாம். ஆனா அதுக்காக பூஜையை ஓட்டித்தள்ளாம வழக்கம் போல நிதானமாவே பண்ணினாளாம். நிவேத்யம் பண்ணர்துக்கு ‘டிங்!டிங்!டிங்!’னு மணி அடிச்ச உடனே தொப்பையப்பர் ‘இதோ வந்துட்ட்ட்டேன்!’னு சொல்லிண்டே தும்பிக்கையை ஆட்டிண்டு வந்துட்டாராம். கோக்கட்டை,அப்பம்,அவல்,பொரி,கடலை சுண்டல் எல்லாம் நன்னா திவ்யமா சாப்டுட்டு கைல இருந்த மிச்சத்தை (நாம நம்ப அம்மா புடவைல தொடைக்கர மாதிரி) அவர் ஒளவையோட முந்தானைல தொடச்சாராம். ‘ஏஏஏஏஏப்ப்ப்!’னு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு, (மெதுவா அவரோட தொப்பையை தடவிண்டே) என்ன ஒளவை! நீ எங்கப்பாவோட டான்ஸ் பாக்கர்த்துக்கு போகலையா?னு கேட்டாராம். நோக்கென்னடாப்பா! சுகமா சாப்பாட்டாச்சு, நினைச்ச மாத்ரத்துல கைலாசமும் போய்டுவாய், நான் இனிமே கிளம்பி போய் சேரர்துக்குள்ள அங்க எல்லாம் முடிஞ்சுடும், நீ சப்ப்ளாம் போட்டு உக்காசுண்டு என்னோட கையால வாங்கி சாப்ட அழகை பாத்ததே நேக்கு போதும்!னு பாட்டி சொன்னாளாம். தும்பிக்கையாள்வார் உடனே, ‘பாட்டி! என்னோட தும்பிக்கையை நன்னா கெட்டியா பிடிச்சுண்டு கண்ணை இறுக்கி மூடிக்கோ!’னு சொன்னாராம். அடுத்த நிமிஷம் பாட்டி கண்ணை திறந்து பாத்தா கைலாசத்துல முதல் வரிசைல முதல் ஆளா உக்காசுண்டு இருந்தாளாம். ‘பாட்டி! இது என்னோட சீட்டு, உன்னை யாரும் எழுப்ப முடியாது. நன்னா எங்கப்பாவோட டான்ஸ்ஸை பாத்துட்டு வா!’னு குழந்தை சிரிப்போட பிள்ளையார் உம்மாச்சி சொன்னாராம்.
அந்த சந்தோஷத்துல மடை திறந்த வெள்ளம் மாதிரி ஒளவையார் பாடினதுதான் 'வினாயகர் அகவல்'. உண்மையான அன்போட யாரு வினாயகர் அகவல் சொன்னாலும் தொப்பையப்பருக்கு பழைய ஞாபகம் வந்து சொன்னவாளை எல்லா விதத்துலையும் உயரமான ஸ்தானத்துக்கு தும்பிக்கையால தூக்கிவிட்டுடுவாராம்.
தும்பிக்கை மேல சஞ்சலம் இல்லாத நம்பிக்கை இருந்ததுன்னா, அவாளை தொப்பையப்பர் ஒரு நாளும் கை விட மாட்டார். தொப்பையப்பர், குழந்தை மாதிரி மனசையும், உறுதியான நல்ல வைராக்கியமான எண்ணங்களையும், விடாமுயற்சியையும் நமக்கு தரட்டும்!னு ப்ரார்த்தனை பண்ணிப்போம்.
ஒரு உம்மாச்சி ஸ்லோகம் பாக்கலாமா இப்போ?
சிவதனயவரிஷ்டம் ஸகலகல்யாணமூர்த்திம் பரசு கமலஹஸ்தம் மூஷிகம் மோதகேன
அருணகுசுமமாலா வ்யாளலம்போதரம்தம் மம ஹ்ருதயனிவாசம் ஸ்ரீகணேசம் நமாமி!
அர்த்தம் - சிவனோட அன்பான புள்ளையும், எல்லாவிதமான செளபாக்கியகுணமும் பொருந்திய, தாமரை,பரசு,மோதகத்தை கையில் தாங்கும் மூஷிக வாஹனனும், சூரியனை போன்ற சிவப்பானதும், வாசனை மிக்கதுமான மாலையை அணிந்தவனும்,அழகான தொங்கிய உலகம் போன்ற பெரிய வயிற்றை உடையவனும், எனது இதயகமலத்தில் நீங்காது நித்தியம் வாசம்செய்யும் கணேசனை வணங்குகிறேன்
Friday, September 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
super...naraya therinjden namma pillaiyaarai parri mikka nandri
ReplyDeleteவாவ்... உம்மாச்சி போட்டோ ரெம்ப நல்லா இருக்கு...அலங்காரம் செம ஜோர்... யார் அலங்காரம் பண்ணினது? கணபதி எந்திரம் அதை விட அழகு...
ReplyDeleteமூல முதல் கடவுள் பத்தி தெரியாதா நெறைய புது விசியங்கள் சொல்லி இருக்க... தேங்க்ஸ்... சுலோகம் அதன் அர்த்தம் எல்லாமும் எல்லாருக்கும் புரியற விதத்துல சொன்னதுல கிரேட்... உன் புண்ணியத்துல அந்த சுலோகம் படிச்சு எங்களுக்கும் புண்ணியம்... நன்றி
சூப்பர், தக்குடு. அ.பா.தங்கமணியின் ஒவ்வொரு வரியையும் வழிமொழியறேன்.
ReplyDeleteவாழ்க, வளர்க!
தமிழ் மதர் டங் அப்படின்னு சொல்லிண்டு, ஆனா தமிழ் படிக்கத் தெரியாம
ReplyDeleteஆயிரக்கணக்கிலே தமிழ்க்குழந்தங்க வெளி நாடுகள்லே இருக்காளே !
அவாள்லாம் எப்படி இந்தக் கதைய படிப்பா ? வினாயகர் அகவல் கதய் தெரிஞ்சுப்பா
அப்படின்னு தோணினது.
அதனால், தாத்தா பேரக்குழந்தகளுக்கு சொல்ற மாதிரி உங்க பதிவை சொல்லியிருக்கேன்.
கேட்டுப் பாருங்க.
தாத்தா.
சூப்பர்
ReplyDeleteகஜானனம் பூத கணாதி சேவிதம்ன்னு ஒரு ஸ்லோகம் இருக்குல்ல? தினமும் புள்ளையார் கோவில் போய் வந்திக்கிட்டிருந்தப்ப இந்த ரெண்டு வரி யாரோ சொல்லி கொடுத்தது மனச்சுக்குள்ளயே கிடக்குது :)
பிள்ளையாரைப் பார்த்தாச்சு!
ReplyDeleteபிள்ளையார் உம்மாச்சி தக்குடுவுக்கு , " சீக்ரமேவ விவாஹப் பிராப்திரஸ்து " என்று அனுக்கிரகம் பண்ணட்டும் .
ReplyDeleteRomba nanna irundhdhu padikka!!!
ReplyDeleteGood Post!!
ReplyDeleteNice post!Love the way you presented:)
ReplyDeleteரெண்டு வருஷத்துல குழந்தை பிறந்தாலும் அவ்வளவு ஸ்ரத்தையா பாத்துக்கறவதான் அம்மா:))
ReplyDeleteவெள்ளி கவசத்தில் கணபதி அழகாவே இருக்கார்:)
எனது இதயகமலத்தில் நீங்காது நித்தியம் வாசம்செய்யும் கணேசனை நினைக்கிறேன். அந்த க சப்தம் பிரதனம்மா இருக்கிரதாலேதான் கம் கணபதயே நமஹா: வருதோ
ReplyDeleteneenga different ganapathy-ies paththi sollirukkaratha padichcha pothu- enga college-la iruntha "kadala vinaayagar" kovil gyabagamum vanthathu! :p
ReplyDeleteathu mattumilla- enga appa solluvaa- antha kathayum yabagam vanthathu- avva paatti pullayaar kozhanda thaanennuttu yemaaththuvaalaam. "paal, theli hen paagu paruppu"- ithu naalum tharen.. nee enakku sangath thamizh mooney moonu koduththaa porumnu!! :D
My favorite god is pillayar too! Nice post Thakkudu!
ReplyDeleteகுழந்தை பாஷைல எழுதினாலும் ரொம்பவும் உணர்ச்சிகரமாகவும் மயிர் கூச்செரியும்படியாகவும் இருக்கு .மிக்க நன்றி என்னை உங்கள் ப்லோக்க்கு அழைத்து சென்றமைக்கு..தன்யன் ஆனேன்
ReplyDeleteபிள்ளையாரோ பிள்ளையார். ஃபர்ஸ்ட் க்ளாஸ் !
ReplyDeleteஇத்தனை அழகு அலங்காரத்தோட எங்க லஸ் பிள்ளையாரைக் கூடப் பார்த்ததில்லை.அவரும் குட்டிஸ்வாமிதான். ரொம்ப் ஸ்வீட்.மகாசக்திமான். என்னால் முடிந்தால் அவரோட துதிக்கை அருகிலேயே இருந்துவிடுவேன்.அவரோட விபூதி நான் போகும் இடமெல்லாம் வந்து எங்கள் எல்லாரையும் காப்பாத்தும். தக்குடு நீ ரொம்ப நன்னா இருக்கணும்.
enna parkavarenu sollitu parkamaley pona thakkuduva intha umpachi payamuruthum paru. ennoda kolanthaiku solli thara oru kadai ghapagapaduthina thakkudukku thankssssssssss
ReplyDeleteThanks thakudu..yenakku oru kadai kadaichdu yen ponnu-kku solla! BTW can u pls talk abt Y Thoppu karanam is important and powerful? We as kids have done thoppu karanam before exams (esp Math) w/o knowing the reason..But now its taught as power yoga!!
ReplyDelete@ லங்கிணி அக்கா - தோப்புக்கரணம் = தோர்பி + கரணம் . மாற்றுக்காதுகள் இரண்டையும் புடிச்சுண்டு உக்காசுண்டு எழுந்திருக்கர்துக்கு இந்த பேர். பொதுவாவே நம்ப காது மடலை(தோடு போடுக்கர இடம்) நல்ல ஒரு தடவை முறுக்கி/இழுத்து விட்டா தூக்க கலக்கம் & சோம்பல் எல்லாம் போய் சுறுசுறுப்பு வரும் (வேணும்னா செஞ்சு பாருங்கோ!). அதனாலதான் நாம கவனக்குறைவா எதாவது தப்பு விட்டா, நம்ப டீச்சர் வந்து காதை பிடிச்சு முறுக்குவா (முக்கியமா கணக்கு டீச்சர்). இன்னொரு காரணம் இப்படி உக்காசுண்டு உடனே எழுந்திருக்கும் போது மூளை வேகமா வேலை பண்ணுமாம். இதெல்லாம் சொன்னா என்னை மாதிரி சுட்டிக் குழந்தைகள் கேப்பாளா? அதான் விளையாட்டு மாதிரி நாம பண்ணின்டு இருக்கோம்.
ReplyDeleteதக்குடு, ஒருவழியா மீ ஆஜர். இட்லி வார்த்த கையோட என்னப்பன் கணபதிக்கு ஒரு அன்பான சலாம். படம் சூப்பர். எழுதின விதம் இன்னும் பிரமாதம்.
ReplyDeleteவிநாயகனை, வேழமுகத்தோனை ஒளவை வணங்கியவிதம் சிறப்பாக இருந்தது.... அலங்காரம்..அம்சமா இருந்தது.... வல்லப கணபதியை போற்றி பாடிய பாரதியின் பாடல் ஒன்று இங்கே...
ReplyDeleteபுகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்
திகழ்வோம்..பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமே
புல்லரக்க பாதகரின் பொய்யையெலாம்: ஈங்கிது காண்
வல்லபைகோன் தந்த வரம்...
Thanks Thakkudu...Idhai konjam broader audience-ku sollalam illaiya?
ReplyDeleteDear Thakkudu, nice post. romba beautifulla vanthurukku ungaloda flow. so neenga ummachi poojai yellam pannuveelaa? alangaram panninathu yaaru?nu yennoda amma asking. romba simple formla cuteaa irukku post.
ReplyDeleteRanjani Iyer
as usual great write up. speechless
ReplyDelete@ காயத்ரி - சந்தோஷம்பா!!..:)
ReplyDelete@ அடப்பாவி தங்க்ஸ் - தக்குடுவோட கைவண்ணம்தான் அது, நன்னிஹை!..:)
@ கவினயா அக்கா - நன்னிஹை!..:)
@ சூரி மாமா - உங்களோட யூ டியூப் லிங்க் நன்னா இருக்கு...:)
@ oilயன் - மனசுக்குள்ள அவர் இருந்தாலே போதும், எல்லாம் நடக்கும்!..:)
@ கீதா பாட்டி - ஒளவையாரே வந்து சொன்ன மாதிரி இருக்கு மேடம்!..:)
@ ஷோபா அக்கா - எல்லாம் உங்க ஆசிர்வாதம்...:)
@ லதா மேடம் - சந்தோஷம்பா!..:)
@ VGR - :)
@ ஜெய்ஷ்ரீ மேடம் - எல்லாம் உங்க ஆசிர்வாதம் டீச்சர்..:)
@ ஜெய்ஷ்ரீமா - வாஸ்தவம் தான், ஆனா வராது வந்த மாமணியா அந்த குழந்தை பொறந்து இருந்தா அதோட கவனிப்பே தனிதான்...:)
ReplyDelete@ TRC மாமா - //எனது இதயகமலத்தில் நீங்காது நித்தியம் வாசம்செய்யும் கணேசனை நினைக்கிறேன்// கணேசனும் நினைக்கிறான்..:) ஆமாம், 'ஓம் கம்'நு சொன்னாலே அதுக்கு பெயர் ஏகாஷர கணபதி.
@ மாதங்கி - உங்க அப்பா சொன்ன கதையும் அருமை, அவர்கிட்ட என்னோட சந்தோஷத்தை
சொல்லுங்கோ
@ ராஜி - ரொம்ப சந்தோஷம்பா!..;)
@ பார்த்தசாரதி சார் - அடியேனும் தன்யனானேன்..:)
@ வல்லி அம்மா - உங்க ஆசிர்வாதம் தான் தக்குடுவுக்கு மிகப் பெரிய பொக்கிஷம், வேற என்ன வேணும் இந்த குட்டி பையனுக்கு..:)
@ sss - ஹா ஹா அடுத்த தடவை நிச்சயம் பாக்கர்துக்கு வரேன் சரியா??..;)
@ மீனா அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!..:)
@ பத்பனாபன் சார் - பாரதியின் பாடல் அருமை..:)
@ லங்கினி அக்கா - கொஞ்சம் கொஞ்சமா உம்மாச்சி ப்ளாக் புது மனுஷாளை ஈர்க்க ஆரம்பிச்சு இருக்கு, பாக்கலாம்,
@ ரஞ்ஜனி - ஊர்ல இருந்த வரைக்கும் தக்குடு ஒரு கோவில் பண்டாரம் தான்..:) உம்மாச்சி அலங்காரம்,அபிஷேகம்,அர்ச்சனை இதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயங்கள்..:) அலங்காரம் தக்குடுவோடுதுனு அம்மாட்ட சொல்லுங்கோ!
@ ஜெய்ஷ்ரீ அக்கா - :))