எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? இந்த பதிவுல குரு உம்மாச்சியை பத்தி நாம எல்லாரும் கொஞ்சம் பாக்கலாமா?
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
குரு - அப்படின்னா ஆசிரியர், ஆசான் அப்படின்னு பல வார்த்தை ப்ரயோகங்கள் இருக்கு. எந்த ஒரு கார்யமானாலும் கணபதிக்கு அடுத்தபடியா நாம ப்ரார்த்தனை பண்ண வேண்டிய ஒரு உம்மாச்சி இந்த குரு. ‘உம்மாச்சியே உலகத்துல கிடையாதே!’னு வாய் வலிக்காம சொல்லிக்கர சில மனுஷா கூட தான் இன்னாருடைய சித்தாந்தத்தை பின்பற்றி நடக்கறேனாக்கும்!னு தன்னுடைய குருவின் பெருமையை சொல்லாம இருக்கமாட்டா. அப்பேற்பட்ட மஹாத்மியம் உள்ள உம்மாச்சி இந்த குரு.
குரு-ங்கர சப்தத்துக்கு பக்கத்தில் அழைச்சுண்டு போறவர்நு ஒரு அர்த்தம் உண்டு. எதோட பக்கத்தில் அழைச்சுண்டு போவார்?னு நாம திருப்பி கேட்டோம்னா, அது நமக்கு வாய்ச்ச குருவை பொறுத்து வித்யாசப்படும். நாம போகும் போதே ஐஸ்வர்யங்களை நினைச்சுண்டு போறோம், நிறையா காசு பணம் வரனும், அழகு சுந்தரியா ஆத்துக்காரி வரனும், லட்டு மாதிரி குழந்தேள் பொறக்கனும், அரண்மனை மாதிரி வீடு கட்டனும்(முக்கியமா பக்கத்தாத்தை விட அழகா இருக்கனும்),படிச்ச படிப்பை விட பெரீய உத்யோகம் கிட்டனும் இப்படியெல்லாம் நம்ம ப்ரார்தனை இருக்கர்துனால அதுக்கு செளகர்யமா உள்ள குருவா நாம தேட வேண்டி இருக்கு, யாராவது பிரம்மத்தை தெரிஞ்சுக்கனும், நல்ல சித்தாந்த ஞானம் வரனும், திருப்தியான மனசு வேணும்! அப்படியெல்லாம் யோசிக்கரோமா? ஒரு கதை உண்டு,
சுப்புணி மாமா நு ஒரு மாமா இருந்தாராம், அவருக்கு குடும்பம், பந்த பாசம் எல்லாம் விட்டுட்டு காட்டுக்கு போய் தபஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருந்துதாம். ஒரு நாள் மத்யானம் நன்னா சுகமா அவாத்து மாமி சமையலை சாப்டுட்டு ஈச்சர் சேர்ல தாச்சுண்டு இருக்கும் போது, தனக்கு தானே சொல்லி பாத்துண்டாராம், ஏ சுப்புணி! உன்னோட பொறுப்பு எல்லாம் கழிஞ்சுருத்துடா! மூத்த பையனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியாச்சு, இளைய பொண்ணை MS படிச்ச ஒரு US மாப்பிள்ளை(இளிச்சவாயன்) தலைல கட்டியாச்சு, பாக்யத்துக்கும்(அவாத்து மாமியோட பேரு)கடைசி காலம் வரைக்கும் காணர மாதிரி ஸ்டேட் பாங்கல FD போட்டு வெச்சாச்சு, இனிமே தைரியமா நாம காட்டுக்கு போய் தபஸ் பண்ணலாம்!னு தனக்கு தானே சொல்லிண்டாராம்.
காட்டுல குளுருமே?னு யோசிச்சுட்டு நல்ல கம்பளி போர்வை மேலும் இன்ன பிற சாமான் செட்டெல்லாம் எடுத்துண்டு காட்டுக்கு போகர்துக்கு ரெடி ஆனாராம், எல்லாம் ரெடி பண்ணி முடிக்கும் போது மத்யானம் 3 மணி ஆயிடுத்தாம், யே பாக்யம்! நான் காட்டுக்கு போய் தபஸ் பண்ண போறேன்டி!னு பெருமையா சொன்னாராம். அரை தூக்கத்துல இருந்த பாக்யம் மாமி, 'எங்க வேணும்னாலும் போய்ட்டு வாங்கோ! என்னோட ப்ராணனை வாங்காம இருந்தா சரி!'னு சொல்லிட்டு அந்த பக்கமா திரும்பி படுத்துண்டாலாம். சுப்புணி மாமா விடாமா, 3 மணி பால்காரன் வர நேரம் ஆகர்து! ஒன்னோட கையால ஒரு காபியை போட்டு தந்தைனா தெம்பா குடுச்சுட்டு போவேன்!னு அவர் சொன்னதுக்கு மாமிடேந்து பதிலே வராததால சரி கிளம்புவோம்!னு கிளம்பி வெளில வந்தாராம். வாசல் வந்தவர் அங்க வெளில இருந்த வெண்கல சொம்பை பாத்துட்டு, யே பாக்யம்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன்டி! வெண்கல சொம்பை அச்ரத்தையா வெளில வெக்காதீங்கோ! வெக்காதீங்கோ!னு, வெண்கலம் விக்கர விலைல திருப்பி வாங்க முடியமா?னு சொல்லிட்டு, இப்படி போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு) இல்லாம இருக்கர இவாளை நம்பி நான் எப்படி காட்டுக்கு போக முடியும்!னு சொல்லிண்டே ஆத்துக்குள்ள போய்ட்டாராம். இந்த மாதிரி சுப்புணிகள் அவாளுக்கு ஏத்த மாதிரியான குருவைதான் செலக்ட் பண்ணிப்பா.
குருங்கப்பட்டவருக்கு வயசு வரையறை எல்லாம் கிடையாது, தன்னோட கைல இருக்கர நல்ல சாமானை அடுத்தவாளுக்கு சிரிச்ச முகத்தோட ஒரு குழந்தை கொடுக்கர்தை நாம பாத்துட்டு நாமளும் அந்த குணத்தை கத்துண்டோம்னா அந்த குழந்தை நமக்கு குருதான். ஊருக்கு வெளில 3 கிலோமீட்டர் இடத்துல ஒரு ஆசிரமும், 4 அடிக்கு தலைல முடியும், வெண்ணையா ஒரு முகமும் இருந்துட்டா அவர்கள் எல்லாரும் ஆச்சார்யன் ஆகிட முடியாது, அதுக்கு ஒரு பாரம்பர்யம், பல வித்யைகளில் தேர்ச்சி, 'தான்' என்னும் எண்ணம் கிஞ்சித் அளவும் இல்லாத உயர்ந்த அறிவு உள்ளவரா இருக்கனும். அந்த மாதிரி ஒரு நல்ல குரு கிடைக்கர்துக்கும் யோகம் இருந்தாதான் கிடைக்கும்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆச்சார்யன்! ஆச்சார்யன்!னு ரொம்ப சிலாகிப்பார்கள். ஸ்ரீவித்யா உபாசனையிலும் குருவுக்கு மகத்தான ஒரு இடம் உண்டு. முக்கியமா சொல்லனும்னா சீக்கியர்களுக்கு அபாரமான குருபக்தி உண்டு. எது கிடைச்சாலும் குருவின் கருணை!னு நினைக்கும் மனோபாவம் அவாளுக்கு உண்டு. ஸிம்மம் மாதிரியான வீரம், ஆக்ரோஷம் உள்ளவாளா இருந்தாலும் குருவிடம் அவர்களை போல ஒரு பவ்யம் பாக்க முடியாது.
சில குருமார்களோட பெருமையை பாத்தேள்னா அது அவாளோட சித்தாந்தத்தால மட்டும் இருக்காது, அந்த ஆச்சார்ய புருஷர்களோட உயர்ந்த சீலத்தால பல நூற்றாண்டுகளுக்கு அவாளோட கீர்த்தி நிலைச்சு இருக்கு. உதாரணத்துக்கு ஸ்ரீஆதிசங்கரர்,ஸ்ரீராமானுஜர்,ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்,ஸ்ரீ ஷீரடி சாய்பாபானு பல அவதார புருஷாளை சொல்லிண்டே போகலாம். சரி ஒரு குரு உம்மாச்சி ஸ்லோகம் பாப்போமா இப்போ?
குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!
(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)
Friday, June 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் நன்றாக இருக்கு தக்குடு.. இது போல அதிகம் போடுங்கள்.. நன்றி..
ReplyDeleteஅந்த குரு உனக்கு சகல பாக்யத்தையும் தரட்டும் தக்குடு
ReplyDelete//தன்னோட கைல இருக்கர நல்ல சாமானை அடுத்தவாளுக்கு சிரிச்ச முகத்தோட ஒரு குழந்தை கொடுக்கர்தை நாம பாத்துட்டு நாமளும் அந்த குணத்தை கத்துண்டோம்னா அந்த குழந்தை நமக்கு குருதான்.//
ReplyDeleteநச் உதாரணம்
சீர்காழியின் கம்பீர குரலில் திருமந்திரம் கேட்ட நாட்களை கிளறிவிட்டது முதல் நான்கு மந்திர வரிகள் !
அருமை டக்குடு! :)
நல்ல ஆரம்பம் தக்குடுகாரு!....வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல வெள்ளிக்கிழமை சாயந்திரம் குருவைப் பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஉங்களுக்கும் குரு பார்வை ஆரம்பிச்சாச்சு தக்குடு.
நல்லபடியாகத் தொடரட்டும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ!
ReplyDeleteகுருகடாக்ஷப்ராப்தி ரஸ்து!
ReplyDelete//உங்களுக்கும் குரு பார்வை ஆரம்பிச்சாச்சு தக்குடு.//
ReplyDelete:)))))
Excellent post.... சுப்புணி மாமா குட்டி கதை, கொழந்தை மாதிரி இப்படி எளிமையா எனக்கும் கூட (!!!!!) புரியற மாதிரி சொன்ன விதம் அருமை.... எப்பவும் போல கிண்டல் பண்ண கூட தோணல.... நல்ல write up... keep up the good work...
ReplyDelete(இதான் உன்னோட ஏரியா போல இருக்கு....அது தெரியமா நாங்க திரட்டு பால் / வைஷுனு கிண்டல் பண்றோம்....ஹி ஹி ஹி )
ReplyDeleteGood Post!!
ReplyDeleteNalla post! migavum arumai! mukkiyama muthal muthalla naama pesa or ezhutha pazhaga solli thara amma or paati thatha kooda guru thaan. intha point a vittutele! :)
ReplyDeleteNice post Very good one.
ReplyDeleteஒரு அனுமார் பக்தன். பரம பக்தன். தீவிர பக்தன். தினசரி அனுமார் கோவிலுக்குச் சென்று " அஞ்சனா கர்ப சம்பூதம் .." என்ற ஆரம்பித்து அத்தனை ஸ்லோகத்தையும் சொல்லி முடித்து தீபாரதனை பார்த்து சடாரி சாத்திண்டு துளசி தளத் தீர்த்தம் வாங்கிண்டு தான் ஆத்துக்கு போவான். அப்ப தான் நிம்மதி.
ReplyDeleteஅடடா ! எத்தனை பக்தி ! எத்தனை பக்தி !! என்று அந்த பக்தனைப் பாக்கிறவா எல்லாம் அசந்து வியந்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். வட மாலை சாத்த வந்தவர்கள் எல்லாரும், இந்த பக்தன் ஸ்லோகங்களைச் சொல்லி
முடிக்கும் வரை காத்திருந்து, அவனுக்கு ப்ரஸாதமான பத்து வடை கொடுத்து ஸந்தோஷப்பட்டு சென்றார்கள்.
ஒண்ணு இரண்டு பேர் இவனுடைய பக்தி பரவசத்தில் மெய் மறந்து போனார்கள். நீங்கள் எங்க க்ருஹத்துக்கு வரணும். எங்காத்துலே கண்பதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்ருஹ ஹோமம் ஏற்பாடு பண்ணிருக்கோம், நீங்க வரணும்
அப்படின்னு சொல்ல, இந்த பக்தனும் அவர்களது க்ருஹங்களுக்குச் சென்று வந்தான். அவனது ஸர்கிள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போனது. போகப்போக, பூஜை புனஸ்கார காரியங்கள் தவிர மற்ற கார்யாதிகளிலேயும், லெளகீகம் இவற்றிலேயும் அவன் உதவி செய்யவே இவனுடைய க்ளையெட்ஸ் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இவனுக்கு இப்போதெல்லாம் அனுமார் கோவிலுக்கு போவதற்கு கூட டயம் கிடைப்பதில்லை. ஆத்துலேந்தே புத்திர்பலம் யசோ தைர்யம் சொல்லிவிடுகிறான்.
ஏன் ஸார், உங்களை இப்போது கோவிலிலே பார்க்க முடிவதே இல்லையே !
என்று ஒருவர் கேட்டார்.
இவன் என்ன பதிலைச் சொல்வான் ? ' நான் எதை வேண்டுமென்று நினைத்தேனோ, அதை அனுமார் கொடுத்துவிட்டார்,
அப்பறம் எதற்கு அனுமாரை அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணி தொந்தரவு கொடுக்க்வேண்டும். ' என்று நினைப்பானோ என்னமோ தெரியவில்லை.
சுப்பு ரத்தினம்.
பின் குறிப்பு: உங்க பதிவுலே ஆரம்பத்துலேயும் முடியும்போது குருவைப்பத்தி மென்ஷன் பண்ணி இருப்பது
மனசுக்கு ஒரு வகையிலே அப்பாடி அப்படின்னு இருக்கிறது.
Possibly " guru " also needs such " off the tangent " things.
/'///கமுக்கமா படிக்கும் நல்ல உள்ளங்களும் ////
ReplyDeleteme the coming... atlast thaks. :))
யோகுரு: ஸசிவ: பரோக்தோ ய:சிவ: ஸகுரு: ஸம்ரூத: |விகல்பம் யாஸ்து ஸநரோ குருதல்பக:
ReplyDeleteதக்சத் குரு...............
சின்ன விதைலேந்துதான் பெரிய விருட்சமே வருகிறது அதுபோல வயசிலயும் உருவத்திலயும் சின்னவரா இருகக்ற நம்ம தக்குடுகிட்டேருந்து உன்னதமான விஷயங்கள் வந்திருக்கு.
ReplyDelete//குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!
//
சமீபத்துல திருநாகேஸ்வரம் சென்றபோது திவ்யமான சிவ தரிசனம் கிடைச்சிது ப்ராஹாரம் சுத்திவரப்போ தட்சிணாமூர்த்தி சுவாமியையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடச்சிது அப்போ இந்த ஸ்லோகம் தெரியாது இனிமே இதை மனப்பாடம் செஞ்சி மேற்கு பார்க்கும் மேன்மை மிகுதெய்வத்திற்கு சொல்லிவணங்கிடறேன் நன்றி கண்ஸ்!
Nice write up! you ve covered most points there! the subbuni story was characteristic! my favourite guru sloka:
ReplyDelete"chitram vadatharor moolae
vruddhaa sishyaa gurur yuvaa
gurosthu mouna vyaakyaanam
sishyaasthu chchinna samshayaah"
@ ஷைலஜா அக்கா - //மேற்கு பார்க்கும் மேன்மை மிகுதெய்வத்திற்கு சொல்லிவணங்கிடறேன் // தக்ஷிணாமூர்த்தி தெற்கு பார்த்து உக்காசுண்டு இருப்பார் அக்கா, தக்ஷிண அப்படிங்கர சமஸ்க்ருத வார்த்தைக்கு தெற்குநு அர்த்தம், அதனாலதான் தெற்கு பார்த்து அமர்ந்த மூர்த்திங்கர அர்த்தம் வர மாதிரி தக்ஷிணாமூர்த்திநு அந்த உம்மாச்சிக்கு நாமகரணம்.
ReplyDelete:-) Best wishes!
ReplyDeleteDear Thakkudu, yethu nejam? play boy maathiri summa act thaan kudutheylaa appo??..:)that subuni mama kadhai funnyyaa irunthaalum athukkula periya thathuvamey irukku!nu yenga amma sonnaa. But whatevrr u write i can find our 'Thakkudu stamp'in that post..:) keep it up Thakkudu! nice and simple post! becos of you i am also started learning some ummachi slokams now....;)
ReplyDeleteRanjani Iyer
தெளிவா ஆரம்பிச்சு, குருவின் அவசியத்தை சொன்ன விதம் அருமை..வரும் நாட்களில் சாஸ்வத போதனை , பிரம்மரகசியம் இவையெல்லாம் இந்த வலைப்பூவில் எதிர்பார்க்கும் நம்பிக்கையை எற்படுத்தியுள்ளது.தக்குடுக்குள் ஒரு குரு அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றையும் எடுத்து சொல்லும் உணர்வு..தக்குடு வாழ்க..அவரது குருவின் புகழ் ஓங்குக...
ReplyDeleteindhamathiriyana vishayangala blog la padhikarthu rombhave nalla iruku, varum sandhadhiyinarikku rombhave udhaviya irukum..Nandri
ReplyDeleteExcellent! wonderful post!
ReplyDeleteதாக்குடு, மழலைகள்.காம் தளத்துக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தாச்சு!
ReplyDeleteஎன்னை மாதிரிச் சின்னக் குழந்தைகளுக்குக் கூடப் புரியறாப்பல இருக்கோல்லியோ, அதான்!
//என்னை மாதிரிச் சின்னக் குழந்தைகளுக்குக் கூடப் புரியறாப்பல இருக்கோல்லியோ, அதான்! //
ReplyDeleteஎனக்கே புரியறது , உங்களுக்குப் புரியாமலா இருக்கும்!
ஆனா ஓண்ணு புரியவே மாட்டேங்கறது.
இத்தனை ஞானவான் எப்படி ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிக்காம இருந்தார் !!
சுப்பு தாத்தா.
@ Sury sir - //ஆனா ஓண்ணு புரியவே மாட்டேங்கறது.
ReplyDeleteஇத்தனை ஞானவான் எப்படி ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிக்காம இருந்தார் !!//
கவலைபடாதீங்கோ!எதிர்கால திட்டத்துல அது இருக்கு!!....:)
பதிவு அருமை தக்குடு!!..தொடருங்கள்...
ReplyDeleteசரி, சரி, தாக்குடு, நீ ஆசிரமம் ஆரம்பிக்கிறச்சே எனக்கும் ஒரு இடம், இப்போவோ ஒன்பது கஜம் புடைவை போட்டு வச்சுடறேன். துண்டெல்லாம் போடலை, அதனால துண்டு இல்லாமல் கிடைக்கணும், சரியா???
ReplyDeleteMrs.Geetha Sambasivam said:
ReplyDelete//சரி, சரி, தாக்குடு, நீ ஆசிரமம் ஆரம்பிக்கிறச்சே எனக்கும் ஒரு இடம்,//
நேக்கும் ஒண்ணு. எங்காத்து மாமிக்கும் ஒண்ணு.
சுப்பு தாத்தா.
எங்களுக்கு ஒரே ரூம் போதும் தாக்குடு. செலவு குறையும் பாரு!
ReplyDelete//குருங்கப்பட்டவருக்கு வயசு வரையறை எல்லாம் கிடையாது, தன்னோட கைல இருக்கர நல்ல சாமானை அடுத்தவாளுக்கு சிரிச்ச முகத்தோட ஒரு குழந்தை கொடுக்கர்தை நாம பாத்துட்டு நாமளும் அந்த குணத்தை கத்துண்டோம்னா அந்த குழந்தை நமக்கு குருதான்.//
ReplyDeleteஅருமை தக்குடு. இதே போல் நிறைய எழுதணும் நீங்க!
had a contented feeling after reading ur post. great write up. really it isnot a easy job to present things in a right way. u have that extra ordinary talent. Waiting for ur next post.
ReplyDeleteSuperb srinivas
@ வித்யா அக்கா - நீங்கதான் பர்ஷ்டு கமண்ட்...:) நன்னிஹை!..:)
ReplyDelete@ LK - நன்னிஹை !...:)
@ ஆயில்யன் - இதை பாத்து உங்களுக்கு சிம்மக்குரல் சீர்காழி ஞாபகத்துக்கு வந்தார்னா அது அடியேன் செய்த பாக்கியம்!...:)
@ ம'பதி அண்ணா - எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்!...:)
@ வல்லி அம்மா - ரொம்ப சந்தோஷம் அம்மா!...:)
@ 'சோடா' அனன்யா அக்கா - பெரியவங்க ஆசிர்வாதம் போல...:)
@ கேடி - என்ன ஒரு வில்லச் சிரிப்பு?..:)
@ இட்லி மாமி - அவசரப்படாதீங்கோ அக்கா, இன்னிக்கி பதிவு பாத்துட்டு ஒரு முடிவு பண்ணுங்கோ!!...:)
@ VGr - நன்னிஹை...:)
@ ஹரிணி - எல்லாத்தையும் நானே சொன்னா அப்பரம் நீங்க எப்படி கமண்ட முடியும்?..:P
@ ஸ்வாதி - நன்னிஹை!!..:)
@ சுப்பு மாமா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!!..:)
@ விதுஷ் - ஒரு ஆளுதான் வெளில வந்துருக்கு, இன்னும் நிறைய பேர் இருக்காங்க...:)
@ மாதங்கி - உங்களோட உம்மாச்சி ஸ்லோகமும் நன்னா இருக்கு!...:)
ReplyDelete@ சித்ரா அக்கா - தாங்கு அக்கா!..:)
@ ரஞ்ஜனி - எதுவுமே நெஜம் கிடையாது உலகத்துல, அதுதான் நிஜம்...:) நீங்க உம்மாச்சி ஸ்லோகம் கத்துக்கர்து பத்தி ரொம்ப சந்தோஷம்..:)
@ பத்பனாபன் சார் - ரொம்ப எல்லாம் எதிர்பாக்காதீங்கோ! தக்குடு அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் இல்லை...:)
@ காயத்ரி மேடம் - ரொம்ப சந்தோஷம் பா!..:)
@ ஜெய்ஷ்ரீ அம்மா - நன்னிஹை!..:)
@ கீதா பாட்டி - நன்னிஹை!..:)
@ மேனகா அக்கா - நன்னிஹை!..:)
@ கவினயா அக்கா - உங்க ஆசிர்வாதம் தான்!..:)
@ ஜெய்ஷ்ரீ அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா!!..:)
Nice pictures, and thanks for your lovely comment..
ReplyDeleteதக்குடு பாண்டி
ReplyDeleteநல்ல கதாகாலட்சேபம் கேட்ட மாதிரி ரசித்தேன்
திரு தக்குடு பாண்டி அவர்களே,
ReplyDeleteதங்களின் குரு பற்றிய விளக்கம் மிக அருமை.உபயம் தெய்வத்தின் குரலா?.நானும் குரு பற்றிய இடுகை ஒன்றை எழுதியுள்ளேன் அதையும் பாருங்களேன்
http://aagamakadal.blogspot.com
குரு பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமை .... மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்க வேண்டிய கருத்துக்கள் . சீக்கியர் பற்றி எழுதியது மிகவும் சரி -
ReplyDeleteஉம்மாச்சி எல்லாரையும் காப்பாத்து!
ReplyDelete@ sushma - Thks for ur nice words..:)
ReplyDelete@ goma - thanks paa!...:)
@ aagamakkadal - sure, i will chk.
@ kanaakkaalam - nanni hai!..:)
@ narasimhar 4000 - :)))
//முக்கியமா *பக்கத்தாத்தை* விட அழகா இருக்கனும்//
ReplyDeleteபாக்தாத்தை ன்னு படிச்சு என்னடாத்துன்னு முழிச்சேன்! :-))
சுப்பு சார் கமென்ட் படிச்சு வயிறு புண்ணாயிடுத்து... :-))
@ Tiva anna - :)))
ReplyDelete//முக்கியமா பக்கத்தாத்தை விட அழகா இருக்கனும்//
ReplyDeleteவீடா? மாமியா? - நீ எதைச் சொல்லுற தக்குடு? :))
@ KRS anna - lolluthaan ungalukku!!..:PPP
ReplyDelete/* குரு - அப்படின்னா ஆசிரியர், ஆசான் அப்படின்னு பல வார்த்தை ப்ரயோகங்கள் இருக்கு. எந்த ஒரு கார்யமானாலும் கணபதிக்கு அடுத்தபடியா நாம ப்ரார்த்தனை பண்ண வேண்டிய ஒரு உம்மாச்சி இந்த குரு. */
ReplyDeleteஒரு சிறிய திருத்தம். குருத்யானம் பின்னர் தான் கணபதியே!! குரு தான் கணபதி யவே அருளுவதால் அவர் தான் முதல் :)
ம்ம்ம் விஜயராகவன் சொல்லி இருப்பது சரியே, முதலில் குரு த்யானம் அப்புறம் தான் கஜானன் வருகையே!
ReplyDelete