
சாரதாம்பா
சிருங்கேரி கர்னாடக மாநிலத்துல இருக்கும் மங்களூர் பக்கத்துல இருக்கும் ஒரு சின்ன மலை பிரதேசம். இயற்கை அழகு மட்டும் இல்லாம ஆன்மீக முக்கியத்துவமும் உள்ள ஒரு ஸ்தலம். தர்மத்தை கலிகாலத்துல காப்பாத்தி கொண்டு போகர்துக்காக ஆதி சங்கரர் ஸ்தாபிச்ச முதல் ஆம்னாய பீடம் இங்கதான் இருக்கு. தன்னோட சிஷ்யாளோட பாதயாத்திரையா வந்துண்டு இருக்கும் போது துங்கா நதியோட கரைல பிரசவ வேதனைல இருந்த ஒரு தவளையோட முகத்துல வெய்யில் படாம இருக்க ஒரு நாகம் குடை பிடிச்சுண்டு இருந்த காட்சியை பாத்துட்டு இந்த இடத்துல இருக்கும் அமைதியான சூழ்னிலை ஆத்மவிசாரத்துக்கு ஸ்ரேஷ்டமானது!னு தீர்மானம் பண்ணி ஸ்தாபிச்ச பீடம் சிருங்கேரி சாரதா பீடம்.
ஆதி சங்கரருக்கும் மீமாம்ஸா சாஸ்த்ரத்துல மஹாபண்டிதரும் ஆன மண்டனமிஸ்ரருக்கும் நடுல வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்துல சங்கரர் ஜெயிக்காத பட்சத்துல சம்சார ஆசரமத்துக்கு வரணும், ஜெயிக்கர பட்சத்துல மண்டனமிஸ்ரர் சன்யாஸம் வாங்கிண்டு சங்கரர் சிஷ்யராகனும்!னு முடிவு பண்ணி வெச்சுருந்தா. இவாளோட வாக்குவாதத்துக்கு சரஸ்வதியோட அம்சமும், மண்டனமிஸ்ரரோட மனைவியும் ஆன உபய பாரதி மத்யஸ்தமா இருந்தா. கடைசில சங்கரர் ஜெயிச்சு மண்டனமிஸ்ரர் சன்யாஸம் வாங்கிண்டதுக்கு அப்புறம் உபயபாரதி சத்யலோகம் திரும்பலாம்!னு யோசிச்சப்ப “இல்லைடி அம்மா!! இந்த லோகத்துல ஆத்ம ஞானத்துக்கு ஆசைபடக் கூடிய சத்மனுஷாளுக்கு அனுக்கிரஹம் பண்ணர்துக்கு பூலோகத்துல இருக்கனும்!”னு சொல்லி வனதுர்கா மந்திரம் மூலமா உபயபாரதியை அன்பால கட்டுப்படுத்தி வேண்டிண்டார். அவளும் சங்கரரை பின் தொடர்ந்து வரர்தாகவும், எந்த இடத்துல நீ திரும்பி பாத்தாலும் அங்கையே பயணம் முடிவடையும்னு சொல்லி பின் தொடர்தாள் நம்ப சாரதாம்பாள். சரியா சிருங்கேரி வந்த உடனே சங்கரர் திரும்பி பாத்ததால் அங்கையே நிலையா தங்கிட்டதா வரலாறு சொல்லர்து.
இந்த இடத்துல சாரதா பீடம் ஸ்தாபனம் பண்ணிட்டு அதுக்கு பாதுகாப்பா நாலு திக்குலையும் துர்கை,காலபைரவர்,ஆஞ்சனேயர் & காளிகாம்பா காவல் தெய்வமா பிரதிஷ்டை பண்ணிட்டார். ஜன நடமாட்டமே இல்லாத இந்த நாலு வனாந்தர சன்னதிகளும் அந்தர்முக தியானம் பண்ணக்கூடியவாளுக்கு தேடினாலும் கிட்டாத ஒரு அற்புதமான இடங்கள். சாரதா பீடத்துக்கு பக்கத்துலையே ஒரு சின்ன பாதை வழியா போனா சுமாரா 150 படிகளுக்கு மேல அழகான மலஹானிக்கரேஷ்வரர் கோவில் இருக்கு. இந்த கோவில்ல இருக்கும் சிவலிங்கமும் அம்பாளும் அழகு சொட்டிண்டு இருப்பா. ஒரு யுகத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட கோவில்னு தலபுராணம் சொல்லர்து. இந்த கோவிலோட முக்கியமான ஒரு சிறப்பு இங்க இருக்கும் ஸ்தம்ப கணபதி. சிருங்கேரி குருபரம்பரையை சேர்ந்த ஆச்சார்யர் வருஷத்துல சில முக்கிய நாட்கள்ல இங்க வந்து பூஜை பண்ணர்து வழக்கம். அப்பிடி அவா வரும்போது கூடவே அவாளோட பூஜைல உள்ள உம்மாச்சியையும் கொண்டு வருவா. அவா பூஜைல இருக்கும் கணபதிக்கு பூஜை பண்ணிட்டு மலஹானிக்கரேஸ்வரருக்கும் பூஜை பண்ணுவா. நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒரு தடவை திடீர்னு சாதாரண ஒரு நாள்ல கோவிலுக்கு வந்துட்டார்.

ஸ்தம்ப கணபதி
ஆச்சார்யர் தங்கி இருக்கும் பிரதேசத்துக்கு நரசிம்ம வனம்னு பேர். துங்கையோட ஒரு கரைல சாரதாம்பா கோவில், இன்னொரு கரைல நரசிம்மவனம். இரண்டு கரையையும் நரசிம்ம சேதுனு ஒரு பாலம் இணைக்கர்து. நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் காலகட்டத்துல பாலம் கிடையாது, அந்த கரைக்கு படகுல தான் போகனும். மழைகாலங்கள்ல வெள்ளம் பெருகித்துன்னா அதுவும் முடியாது. இப்போ திடுதிப்புனு ஸ்வாமிகள் கோவிலுக்கு வந்ததால அவாளோட பூஜைல இருக்கும் உம்மாச்சியை கொண்டு வரலை. இந்த கோவில்ல கணபதி விக்ரஹம் கிடையாது. முதல் பூஜை கணபதிக்கு பண்ணாம எப்பிடி பண்ண முடியும்?னு யோசிச்சிட்டு அங்க இருந்த ஒரு கல்தூணுக்கு ஒரு குடம் ஜலம் அபிஷேகம் பண்ண சொன்னார். அதுக்கு அப்புறம் கணபதி உம்மாச்சியோட ஸ்லோகத்தை சொல்லிண்டே ஒரு மஞ்சள் துண்டால கணபதி ரூபத்தை கோடு மாதிரி போட்டார். முழு ரூபமும் போட்டு முடிச்சு ஸ்வாமிகள் கையை எடுத்த உடனே மஞ்சள் பட்ட இடம் மட்டும் ஒரு இன்ச் புடைப்பு சிற்பம் மாதிரி வெளில வந்துதாம். உடனே சாங்கோபாங்கமா உம்மாச்சி பூஜையை பண்ணிட்டு அவரோட அப்பா அம்மாவுக்கும் பூஜையை பண்ணினாராம். ஸ்தம்பம்னா தூண்னு அர்த்தம். ஸ்தம்பத்துலேந்து பிரசன்னமானதால ஸ்தம்ப கணபதினு பேர் வாங்கிண்ட அந்த சுவாமி அதுக்கு அப்புறம் வந்த ஆச்சார்ய பரம்பரைல எல்லாருக்கும் பிரியமான மூர்த்தியா இருக்கார். நியாயமான வேண்டுதல்களை தட்டாம நிறைவேத்தி வச்சுண்டு இருக்கார். சிருங்கேரில அவசியம் தரிசனம் வேண்டிய ஒரு அற்புதமான மூர்த்தி.
எங்க பாத்தாலும் ஒரே பாக்கு மரம், தென்னை மரம்னு அழகான வனப்பிரதேசமா காட்சி அளிக்கர்து. சாரதாம்பாளோட கோவிலுக்கு பக்கத்துல 800 வருஷம் பழமையான அழகான வித்யாசங்கரர் ஆலயம் இருக்கு. விஜய நகர சாம்ராஜ்யம் உண்டாக காரணமான வித்யாரண்யர் காலத்துல இதை கட்டியிருக்காளாம். அற்புதமான சில்பசாஸ்திர அழகை இந்த கோவிலோட ஒவ்வொரு பாகத்துலையும் உணரலாம். சதா சர்வ காலமும் சம்சார சாகரத்துல மாட்டிண்டு திண்டாடிண்டு இருக்கும் எல்லா மனுஷாளுமே வருஷத்துக்கு 2 நாளாவது பந்தபாசங்களை மறந்து நிஸ்சிந்தையா இந்த மாதிரி ஸ்தலங்கள்ல போய் இருந்துட்டு வந்தா மனசுக்கும் புத்திக்கும் ரொம்ப நல்லது. பதவி,அதிகாரம்,சொத்து,சுகம்னு மனசுக்கும் மூளைக்கும் கர்வத்தை தரும் எல்லா விதமான நினைப்பையும் மூட்டை கட்டி நம்பாத்து ஸ்டோர் ரூமுக்குள்ள போட்டுட்டு, ஐபோன்/ஐபாட்னு நம்மை பாடாபாடு படுத்தும் தேவையில்லாத ஜடவஸ்துக்கள் இல்லாம, கைசெலவுக்கு மட்டும் காசு வெச்சுண்டு பரதேசியாட்டமா இருந்துட்டு வந்தாக்க என்ன ஆகும்!னு நான் சொல்லமாட்டேன். போய் இருந்துட்டு வந்து என்ன ஆச்சு?னு நீங்க சொல்லுங்கோ!!
போன தடவை அங்க போய் தங்குவதற்கு ரூம் கேட்டு மடத்து ஆபிஸ் போனபோது, “சாரதா கிருபா வேணுமா? குருகிருபா வேணுமா?”னு கேட்டா. “ரெண்டுமே எனக்கு வேணும், இருந்தாலும் குருகிருபாவே தாங்கோ!”னு சொன்னேன் (குருகிருபா இருந்தா சாரதா கிருபா பின்னாடியே வந்துடும்!னு மனசுல ஒரு நம்பிக்கை). மேல சொன்ன ரெண்டு பேருமே கட்டிடத்தோட பெயர்கள். :)

ஸ்ரீ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள்
சிருங்கேரி சம்பந்தமா ஒரு உம்மாச்சி ஸ்லோகம் இப்போ பாக்கலாமா?
ச்ருதாயாம் யதுக்தெள ந ஹி ச்ராவ்யசேஷம்
ஸுரூபே ச த்ருஷ்டே ந த்ருச்யாவசேஷம்
நதேங்க்ரெள ந க்ருத்யம் தயாப்தெள ந லப்யம்
ந மாஹாத்ம்ய ஸீமா ச யேஷாம் பஜே தான்!!
ஸ்லோகத்தோட பொருள் - யாரோட மஹிமைக்கு எல்லையே இல்லையோ, யாரோட வார்த்தைகளை கேட்டதுக்கு அப்புறம் கேக்கர்துக்கு வேற ஒன்னுமே இல்லையோ, யாரோட சுந்தரமான ரூபத்தை தரிசனம் பண்ணினதுக்கு அப்புறம் பார்பதற்கு வேற ஒன்னுமே இல்லையோ, யாரோட பாதகமலத்துல நமஸ்காரம் பண்ணினதுக்கு அப்புறம் பண்ணர்த்துக்கு வேற ஒன்னுமே இல்லையோ, யாரோட பரிபூர்ணமான கிருபாகடாக்ஷத்தை சம்பாத்யம் பண்ணினதுக்கு அப்புறம் சம்பாத்யம் பண்ண வேற எதுவும் இல்லையோ அத்தகைய குருநாதரை பணிகிறேன்
படிக்கும்போதே ஆழ்மனதில் ஓர் பக்திப் பிரவாகம் தோன்றுகிறது .அருமையான படைப்பு .அனுபவித்து எழுதும் உங்கள் எழுத்தில் ஓர் தனி சுவை தெரிகிறது .வாழ்த்துக்கள் பக்தி மணம் கமழும் படைப்பிற்கு ...
ReplyDelete//மஞ்சள் துண்டாலே கணபதி.......// அப்படியே ஆடிப்போயிட்டேன்! அப்புறம்தான் இது மஞ்சக் கிழங்கு துண்டுன்னு ஞாபகம் வந்தது!
ReplyDeleteபதிவு அருமை தக்குடு.
நானும் ஒன்னு போட்டேந்தான்...... ஆனால்..... அஞ்ஞானமா எழுதுனதுமாதிரின்னுதான் சொல்லணும்.....
புதுசா அத்வைதான்னு ஒரு ஹொட்டேல் திறந்துருக்காங்க. அருமையா இருக்கு.
ஃபார் ஃபாலோ அப்.
ReplyDeleteதக்குடு
ReplyDeleteரொம்ப நாளாச்சே ஸ்ருங்கேரி பத்தி பதிவு போடறேன்னு சொல்லி, போடலியேனு யோசிச்சேன். தீபாவளி ஸ்பெஷல்?
நன்னா இருக்கு. ஆதி சங்கரர், மண்டன மிஸ்ரர் மற்றும் அவாள பின் தொடர்ந்து பிரயாகைல இருந்து வந்துண்டு இருக்கா உபய பாரதி. துங்கா நதி கரைல, ஆத்து மணல்ல நடக்கற போது, உபயபாரதி கால் கொலுசு / மெட்டி சத்தம் கேக்காம போயிடும். அதுனால ஒரு வேளை அவள் வரலியோனொன்னு ஆசார்யாள் திரும்பி பார்க்க உபயபாரதியும் அங்கேயே இருந்துடறாள்.
போன ஞாயிறு அம்பாள் + சந்திரமௌலீஸ்வரர் தரிசனம் திவ்யமா எனக்கு கிடைத்தது. (stroudsburgh PA).
அப்படியே உனக்கு Happy (thalai - 1) deepavali. மற்ற எல்லாருக்கும் ஹாப்பி தீபாவளி.
//நம்மை பாடாபாடு படுத்தும் தேவையில்லாத ஜடவஸ்துக்கள் இல்லாம, கைசெலவுக்கு மட்டும் காசு வெச்சுண்டு பரதேசியாட்டமா இருந்துட்டு வந்தாக்க//
ReplyDeleteஆசை இருக்கு நெறய்ய. அவ திருவுளம் எப்படியோ?
//“சாரதா கிருபா வேணுமா? குருகிருபா வேணுமா?”னு கேட்டா. “ரெண்டுமே எனக்கு வேணும், இருந்தாலும் குருகிருபாவே தாங்கோ!”//
:)))
ஸ்தம்ப கணபதி பற்றிய செய்தி அருமை. ஸ்லோகமும் மிக அருமை. ரொம்ப நன்றி தக்குடு.
அன்பு தக்குடு
ReplyDeleteஸிருங்கேரி என் வெகு நாள் ஆசை.
பங்களூருவில் மகன் இருக்கும் போதே போயிருக்கணும்.
மஹராஜபுரம் பாடின வந்தேஹம் ஷாரதாவைக் கேட்டு ஆறுதல் பெறுவேன்.
நான் போகலைன்னா என்ன அவளே வந்துட்டா.
ஸ்தம்ப கணபதி தம்பிக்க வைக்கிறார். வேறேன்ன எதிரப்பர்க்க முடியும்மா. கணேசன் என்றாலெ அளவில்லாக் கருணைதானெ. கண்ணீல் ஜலம் வரதும்மா பதிவைப் படிததும். நீ நன்றாக இருக்கணும்.
"நியாயமான வேண்டுதல்களை தட்டாம நிறைவேத்தி வச்சுண்டு இருக்கார்."-- இந்த வார்த்த பிரயோகம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. எனக்கு 'உபய பாரதி' தான் சாரதா அம்பாள்-ங்கற கதை இப்போ வரைக்கும் தெரியாது! நான் ஸ்ருங்கேரி லாம் போனதே இல்ல! But ரொம்ப beautiful place ஆ இருக்கும் போலருக்கு நீங்க சொல்றத பாத்தா... must go there sometime ...
ReplyDelete:) ...
Well penned. Loved the portion guru krupa and saradha krupa.
ReplyDeleteஅருமை தக்குடு.சிருங்கேரிய பத்தி அழகா விவரிச்சு எழுதியிருக்கே.
ReplyDelete//பதவி,அதிகாரம்,சொத்து,சுகம்னு மனசுக்கும் மூளைக்கும் கர்வத்தை தரும் எல்லா விதமான நினைப்பையும் மூட்டை கட்டி நம்பாத்து ஸ்டோர் ரூமுக்குள்ள போட்டுட்டு, ஐபோன்/ஐபாட்னு நம்மை பாடாபாடு படுத்தும் தேவையில்லாத ஜடவஸ்துக்கள் இல்லாம, கைசெலவுக்கு மட்டும் காசு வெச்சுண்டு பரதேசியாட்டமா இருந்துட்டு வந்தாக்க என்ன ஆகும்!//
போய் பார்க்கணும் போல இருக்கு.நன்றி பகிர்வுக்கு.
Maanaseegama, ambhaalukku namaskaram pannindaen. Very nice!
ReplyDeleteதக்குடு இந்த தடவை மங்களூர் போகும் போது நிச்சியம் சிருங்கேரி போய்விட்டுத்தான் வர்னும்கிற ஆசையயை கிளப்பிவிட்ட பதிவு.trc
ReplyDeleteVery nice article Thakudu!!
ReplyDeleteSringeri is a very divine place. If you go once the place itself will pull you to go there again and again. For that you need to have Guru's Krupa. I'm happy to say that I visit this holy place right from my 3 years of age. By Ambal and Gurus grace of Sringeri I'm living happily. We're very fortunate to have HH Sri Sri Bharati Theertha Mahaswamigal as our Kula Guru for many generations now.May Goddess Sharadamba and Guru bless all. Loka Samastha Sukino Bhavanthu
//கைசெலவுக்கு மட்டும் காசு வெச்சுண்டு பரதேசியாட்டமா இருந்துட்டு //
ReplyDeletevery well said.Sringeri ya appidiye kann munnaala kondu vanthutta. Sthamba Ganapathy story is news to me.
Oru chinna doubt, nee potturikkara photo Chandrasekhara Bharathiya illai Narasimha Bharathiya?
தேங்க்ஸ் தக்குடு. நெறைய புது விஷயங்கள் தெரிஞ்சுட்டேன். நான் சிருங்கேரி போனதில்ல, ஆனா இங்க இருக்கற சாரதாம்பாள் கோவில் அடிக்கடி போவோம். அங்க போனாலே ஒரு அமைதி கிடைக்கற மாதிரி தோணும், which I don't get everywhere. Should visit Sringeri too sometime. Thanks
ReplyDelete@ shobha mami - Thanks for your doubt and sorry for the mistake. :)
ReplyDeleteதக்குடு, 2-3 நாட்கள் முன்னாடித்தான் சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் பற்றி எழுதினேன்...[நாம பேசினது நினைவிருக்கிறதா? :-)...] இன்று நீங்க சிருங்கேரி ஸ்பெஷல் இடுகை போட்டிருக்கீங்க...பேஷ், பேஷ்...
ReplyDeleteஎத்தனை பேரால இப்படி உணர்ந்ததை
ReplyDeleteபடிக்கிறவாளும் உணர்ர மாதிரி எழுத முடியறது
அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்
உமக்கு இருக்கு.சந்தோஷம்
அருமையான பதிவு
//பதவி,அதிகாரம்,சொத்து,சுகம்னு மனசுக்கும் மூளைக்கும் கர்வத்தை தரும் எல்லா விதமான நினைப்பையும் மூட்டை கட்டி நம்பாத்து ஸ்டோர் ரூமுக்குள்ள போட்டுட்டு, ஐபோன்/ஐபாட்னு நம்மை பாடாபாடு படுத்தும் தேவையில்லாத ஜடவஸ்துக்கள் இல்லாம//
ReplyDeleteகேக்க நன்னா இருக்கு...ஐபோன், ஐபேட் இதெல்லாம் கூட தூக்கிப் போட்டுடலாம்.... ஆனா இந்த கர்வம்ங்கற விஷயம் இருக்கே... தலைகனம்னு இல்லைன்னாலும் பெருமை, செருக்கு மாதிரி சமாச்சாரங்கள்... இதுகளைத் தூக்கிப் போட குருக்ருபா, சாரதா க்ருபா ரெண்டும் போறும் போறும்ங்கற அளவுக்கு வேணும்...
//கைசெலவுக்கு மட்டும் காசு வெச்சுண்டு பரதேசியாட்டமா//
அதுவும் இல்லாட்டி தானே பரதேசி? கைச்செலவுக்கு மட்டும் தானே கொண்டு வந்தோம் அந்தக் காசு பத்திரமா இருக்கான்னு ஒரு ஓரத்து பக்கு பக்குங்குமே மனசு?
சொல்லவிட்டுப்போச்சு... ஸ்தம்ப கணபதி பத்தின வரலாறு அருமையான செய்தி. Thanks for sharing it.
ReplyDeleteதக்குடு,
ReplyDeleteநானும் சிருங்காரம் பத்தி எழுதினேன்...
நீங்களும் எழுதிருக்கேள்...எவ்ளோ வித்தியாசம்?
கலக்கிட்டீங்க போங்க..!
அப்புறம் தலை தீபாவளி - 1 ஆமே...திருமண / தீபாவளி வாழ்த்துக்கள்...!
-பருப்பு ஆசிரியன்
Superb - www.hellovenki.blogspot.com
ReplyDeleteதக்குடு உன் சொல்லால் சாரதாக்கு அலங்காரம் செய்துட்டே...அற்புதம்! சிருங்கேரிக்கு சமீபத்திலும் சென்றுவந்தேன் உன் இடுகை நினைவுகளை மலரவைத்தது சிருங்கேரிபீட நாயகிமீது ஒரு பாட்டுபாடி அனுப்பவா?
ReplyDeleteசிருங்கேரியில் ஐந்து நாட்கள் தங்கிய நினைவுகள். ஒவ்வொரு இடமும் ரசித்துப் பார்த்தோம். நன்றி அழைப்புக்கு.
ReplyDeleteநல்லா இருக்கு! நானும் போன வருஷம் சிருங்கேரி போனேன்..அந்த சாரதாம்பா மனசுல பிரட்யட்சமா நிற்கிறாப்பல ஒரு ப்ரமை....
ReplyDeleteஸ்ருங்ககிரியில் சாரதாம்பாள் வந்தகதை படிச்சிருக்கேன்;ஆனால் ஸ்தம்ப
ReplyDeleteகணபதி கதை இப்பத்தான் உன்மூலமா தெரிஞ்சிண்டேன்;பகிர்வுக்கு நன்றி!
thakkudu, pesama you can start a rival for sakthi vikatan and other magazines.. :-) I have not been to Sringeri yet, great post!
ReplyDelete@ All readers - தக்குடுவுக்கு அடுத்த வருஷம் தான் தலை தீபாவளி! எனக்கு பிரியமான சில அக்கா & அண்ணாக்கள் கிளப்பிவிடும் புரளியை நம்பவேண்டாம்!
ReplyDeleteகோபாலன் அண்ணாதான் ஆரம்பிச்சு வச்சுருக்கார் போலருக்கு!! :))
@ அம்பாளடியாள் - உங்களோட அன்பான வார்த்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்!!
ReplyDelete@ துளசி டீச்சர் - உங்களோட பதிவை பாத்தேன். நீங்க உங்க ஸ்டைல்ல எழுதியிருக்கேள்! :)) பத்தோட பதினோராவது இடமா சிருங்கேரிக்கு போகர சமயம் அது வெறும் Location. அந்த பூமியோட பாரம்பர்யம் தெரிஞ்சுண்டு போகும் போது அது Destination :)
@ கோபாலன் அண்ணா - கொலுசு/மெட்டி கதை எல்லாருக்குமே ஏகதேசம் தெரியும்னு தான் ஸ்தம்ப கணபதியை கூட்டிண்டு வந்தேன் :) Thala deepavali புரளியை கிளப்பிட்டேளே அண்ணா! மெயிலா வந்துண்டு இருக்கு! :)
@ கவினயாக்கா - உங்களோட மனசுக்கு பிடிச்சிருந்ததுல எனக்கும் ரொம்ப சந்தோஷம்! :)
@ வல்லிம்மா - பெங்களூர்ல புள்ளை இருக்கும் போதே போயிருக்க வேண்டாமோ! பழமையான ஒரு 'குஞ்சு' கிருஷ்ணர் கோவிலும் உண்டு!
@ மாதங்கி - அப்பாம்மாவோட ஒரு தடவை போயிட்டு வாங்கோ! அக்டோபர் - டிசம்பர் போனா பனிப்போர்வை போர்த்திண்டு இருக்கும்.
@ 'பாங்க்' மாமி - சந்தோஷம் மாமி! :)
@ ரமா மாமி - பெங்களூர்லேந்து 8 hrs தான். போயிட்டு வாங்கோ!
@ லதா மேடம் - :))
@ TRC சார் - பாத்து ஜாக்ரதையா பொயிட்டு வாங்கோ மாமா!
@ சாரதா அக்கா - இந்த போஸ்ட் உங்களுக்கு(ம்) பிடிக்கும்னு ஞான் அறியும்! :)
@ ATM அக்கா - உண்மைதான்!! அமைதிக்கு அங்க பஞ்சமே இருக்காது!
@ மதுரையம்பதி அண்ணா - பேசினது அப்பிடியே ஞாபகம் இருக்கு! பிரதோஷ பூஜையை மறக்க முடியுமா? :)
@ ரமணி சார் - இதை விட பிரமாதமா எழுதக்கூடிய பெரியவா நிறையா இருக்கா. உங்களோட அன்புக்கு நன்றி!
@ அருண் - கர்வம் போகாதுங்கர்து வாஸ்தவம் தான். அதுக்கு தான் நிறையா நமஸ்காரம் பண்ணர்து. கொஞ்சமா பைசா இருந்தா மனசு அதையே வட்டமடிக்காது. வருகைக்கும் கருந்துக்கும் மகிழ்ச்சி!
ReplyDelete@ பருப்பு ஆசிரியர் - உங்களுக்கு தெரியாம தலை தீபாவளி எல்லாம் தக்குடு கொண்டாட முடியுமா!! அடுத்த வருஷம் தான் நமக்கு! :)
@ வெங்கட் - நன்னிஹை!
@ கீதாம்மா - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி!
@ ராமமூர்த்தி சார் - போனேளா? ரொம்ப சந்தோஷம்!
@ லலிதா மேடம் - நீங்க இந்த சின்னப்பயலோட பதிவுக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்மா!!
@ கேடி - என்னை வச்சு காமெடி பண்ணாதீங்கோ! :)
You are a Multi Faceted Personality. I have missed your Blogs these long days. I will read your blogs when I find time.
ReplyDeleteMy Heartiest Blessings & Appreciations.
Thank You Sir.
சிருங்கேரியின் சூழலே ஒரு மன அமைதியைத்தரும்.அருமையான பகிர்வு.
ReplyDeleteஉங்கள் ப்ளாக் சைட்டிற்கு என் முதல் விஜயம். (அப்பாவிதங்கமணி சைட்டில் உங்கள் பின்னூட்டத்திலிருந்து நூல் பிடித்து வந்தேன்). முதலில் நல்ல போஸ்ட்டுக்கும், எழுத்துக்கும் பாராட்டுக்கள். கல்யாணம் கூட ஆகாத சின்ன வயதில் இவ்வளவு பக்திபூர்வ ஆர்வத்துக்கும் பாராட்டுக்கள். சிருங்கேரி பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
ReplyDelete(நான் தோஹாவில் 19 வருஷம் 1981-2000) குப்பைகொட்டி விட்டு துபாய் போய்விட்டு 3 வருஷங்களுக்கு முன் ரிடயர்ட்! உங்கள் ஈமெயில் ஐ டி கிடைத்தால் தோஹாவில் இருக்கும் நண்பர்களுக்கு சொல்லுவேன்.) - ஜெ.
@ ரத்தினவேல் ஐயா - தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி! 'சார்' வேண்டாம் சும்மா தக்குடு!னே கூப்பிடலாம்! :)
ReplyDelete@ சென்னை பித்தன் - வருகைக்கு நன்றி சார்!
@ ஜெகன் நாதன் சார் - மனம் திறந்த பாராட்டுக்கு முதலில் நன்றி! தோஹால இருந்தேளா?? சூப்பர் சூப்பர்! என்னோட மெயில் ஐடி இதுதான் thakkudu83@gmail.com சமயம் கிட்டும் போதெல்லாம் வாங்கோ! :)
romba arputham thambi! ummachi blogla innum niraya vizhayam ezhuthu!
ReplyDeleteT.Thalaivi
கங்கா ஸ்நானமும் துங்கா பானமும் விசேஷம் என்று பிரசித்தி பெற்றவை.
ReplyDeleteஅருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Brilliant Thakkudu. Love it! We were there two years back and very fortunate to have Sringeri gurus as our Kula gurus for generations. We call the ganapathi "தோரண கணபதி". My dad will not come back from sringeri without arranging Kuzhakattais for him. It is the serene place to be!
ReplyDelete@ தா. தலைவி அக்கா - எழுதலாம் எழுதலாம்!
ReplyDelete@ ராஜி மேடம் - அருமையான வாக்கியம். புது தகவலுக்கு நன்னிஹை!
@ A and A அக்கா - தோரண கணபதி சாரதா கோவிலுக்கு பக்கத்துல இருக்கு, ஸ்தம்ப கணபதி மலஹானிக்கரேஷ்வரர் கோவில்ல இருக்கு! பெரும்பாலும் யாரும் அங்க போகர்து இல்லை.
தக்குடு, மிக்க நன்றி.தோரண கணபதிக்கும் அதே மாதிரி ஒரு கதை இருக்கறதுனால குழப்பம் அயிடுத்து. படத்த பார்த்துட்டு கேட்டு இருக்கனும். தோரண கணபதியை எப்பொதும் கவசத்தோடு பார்த்து பழகிடுது. அதுனால இரண்டு பெரும் ஒன்னு நினைச்சுண்டுடேன்.
ReplyDeleteதோரண கணபதி பற்றி இங்கே.
http://www.sringeri.net/temples/sri-torana-ganapati
very pleasant, natural flow.. very satisfactory and comfortable to mind. Thank you thakkudu paandi.
ReplyDeleteLovely, From where do you get the ummachi photos? That too 'Sundari' kannulaiye nikkara.
ReplyDeleteps: Appppa romba naal-kku apporom Blogs padikkaren..Started with your ummachi kaapathu..
romba naalaa ummachi kaappathala pola irukke. oru postaum kaanom
ReplyDeleteAPPADIYE MADHVAM PATTRIUM POST PODUNGALEN
ReplyDeleteArumai. Niraivu.
ReplyDelete