
வாலை குமரியடி கண்ணம்மா!!
ஒரு குழந்தை கைல 6 மிட்டாய் இருக்குன்னு வெச்சுக்கோங்கோ, அதை எல்லாருக்கும் வினியோகம் செய்யரோது கடைசியா ஒரு மிட்டாயை மட்டும் அந்த குட்டி குழந்தை தன்னோட அழகான வாய்ல இரண்டு மூனு தடவை வச்சு ருசி பாத்துட்டு கண்ணத்தில் குழி விழும்படியா ஒரு பொக்கை வாய் சிரிப்பு சிரிச்சா அந்த மிட்டாய் எவ்ளோ மதுரமான ஒரு வஸ்துவா இருக்கனும்? அதை மாதிரி தான் சாக்தமும், பகவத்பாதர் தன்னோட ஆத்மார்த்தமான ஆராதனையா எடுத்துண்டது சாக்தத்தைதான்..:) அதனால தான் அவர் பல உம்மாச்சி ஸ்லோகம் எழுதின அதே வேளையில், அம்பாள் சம்பந்தமா தன்னை மறந்து நிறையா பண்ணி வெச்சுருக்கார்.
அவரோட கற்பனாசக்தி காலை நேர சூரியனாய்,மணக்கும் மல்லிகையாய்,அதில் கிறங்கும் வண்டாய்,பொதிகைமலை தேனாய்,தாமிரபரணி ஊற்றாய்,அதில் எழும் அழகிய காற்றாய்,கார்காலத்து மயிலாய்,அதற்கு இசைக்கும் கருங்குயிலாய்,மாலை நேர இளவெயிலாய் பல வர்ணஜாலம் காட்டியது அம்பாள் மீதான வர்ணனையில் தான் என்பது உலகம் அறிந்த உண்மை.

மலயத்வஜன் பெற்ற பெருவாழ்வு...:)
சாக்த முறையை அதிதீவிரமா கடைபிடிக்கறவாளுக்கு சாக்தர்கள்நு பேர். மாத்ரு பாவம் இவா கிட்ட ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எல்லா வஸ்துவும் இவாளுக்கு அம்பாளாவே தெரியும். அவாளுக்கு கிடைக்கும் எல்லா ஐஸ்வர்யமும் அம்பாள் போட்ட பிச்சை! எனும் எண்ணம் அழியாமல் இருக்கும். ஒரு வசனம் கூட உண்டு //உண்ணும் உணவு,உடுக்கும் உடை,பருகும் நீர்,மெல்லும் வெற்றிலை எல்லாம் அவள் இட்ட பிச்சை//னு பெருமையா சொல்லிப்பா.
இந்த அம்மா இருக்காளே அவளுக்கு தாராளமான மனசு, குழந்தைகள் கேட்டது சாதாரணமான பிற வஸ்துவா இருந்தாலும் அவள் பரவஸ்துவையே சர்வசாதாரணமா "இந்தா கோந்தை! வெச்சுக்கோ சரியாஆஆ!"னு குடுத்து விடும் இளகின மனசு. ஒரு அசட்டுப் பிள்ளை “இங்க கொஞ்சம் பாரேன் அம்மா!னு தொடர்ந்து கேட்டுண்டே இருந்தானாம், ஆனா நம்ப அம்மாவோட காதுல வேற மாதிரி விழுந்து அவள் 14 லோகத்துலையும் கிடைக்கர்த்துக்கு அதிசயமான சாயுஞ்யத்தை குடுத்துட்டாளாம். இதை செளந்தர்யலஹரில ஒரு ஸ்லோகத்துல அழகா சொல்லி இருப்பார் அந்த காலடி மைந்தன். "பவானி த்வம் தாசே!"னு அந்த ஸ்லோகம் ஆரம்பிக்கும்.
பவன் அப்பிடின்னா தலைவன்னு அர்த்தம்,பவனோட ஆத்துக்காரி பவானி. "ஹே பவானி! இந்த தாசனை கொஞ்சம் பாக்கக்கூடாதோடியம்மா!னு நாம கேட்டா அது தயாளமான மனசுடைய அவளோட காதுல "பவானித்வம் தாசே"னு விழுந்து "இந்தா கோந்தை!"னு சர்வசாதாரணமா சர்வலோக சக்கரவர்த்தியா ஆக்கிடுவா. (பவானித்வம் அப்பிடின்னா தலைமைனு ஒரு அர்த்தம் வரும் & நான் நீ எனும் பேதம் அற்ற நீயே நானாகிறேன் எனும் நிலைனும் ஒரு அர்த்தம் வரும்).இதே அர்த்தம் வரும்படியான ஒரு அந்தாதிப் பாடல் நம்ப அபிராமிப்பட்டரோடுது,
//தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே //
அம்பாளோட ஆராதனைல கேரள தேசத்திலையும், நம்ப தமிழ் நாட்டுலையும் இஞ்சிக்கு சிறப்பு இடம் உண்டு. பாசிப்பருப்போடு சேர்ந்து செய்த பொங்கலாகட்டும்,பானகமாகட்டும், நீர்மோராகட்டும் எல்லாத்துலையும் இஞ்சியோட ருசி இருக்கும். இஞ்சி செழுமையாக நல்ல நீர்வளத்தோட இருக்கும் போதும் சரி, நாளாவட்டத்துல காய்ஞ்சு போய் சுருங்கி சுக்கா ஆகும் போது அதோட ருசில எந்த வித்தியாசமும் இருக்காது, அதே போல ஒரு உண்மையான சாதகன் லோகத்தையே பரிபாலனம் பண்ணும் ராஜாவா ஆனாலும் சரி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடுத் தெருவில் நின்னாலும் சரி அம்பாளிடம் அவன் கொண்ட திடமான வாத்சல்யம் மாறாம இருக்கனும், அதுதான் உண்மையான சாக்தனுக்கு உரிய லக்ஷணம். அதை உணர்த்தர்துக்கு தான் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்படுகிறது.

மதி சூடும் எங்கள் காந்திமதி
ஒரு நண்பர் என்கிட்ட சும்மாவாவது வம்புக்கு இழுக்கர்த்துக்காக “ஹே தக்குடு! சும்மா அம்பாள்! அம்பாள்!னு சொல்லிண்டு இருக்கியே! பரமேஸ்வரனுக்கு தாயுமானவர்,அம்மையப்பர்னு எல்லாம் பேர் இருக்கு தெரியுமா? உனக்கு உங்க அம்பாள் என்ன பண்ணுவாளோ அதை ஸ்வாமியே பண்ணிடுவார்"னு சொன்னார், அதுக்கு நான், பாரி வள்ளலை போல் பெரிய வள்ளல்னு சொன்னா அப்போ உண்மைலையே பாரிதானே பெரிய வள்ளல்! அதை மாதிரிதான் நீங்க சொல்லர்தும், தாய்மாதிரி நடிக்க முயற்சி பண்ணும் அவருக்கே இவ்ளோ கருணைனா எங்க அம்பாளுக்கு எவ்ளோ கருணை இருக்கும் & நீங்க சொன்ன அம்மையப்பர்லையும் அம்மை தான் முதல்ல வருதுவோய்! அப்பன் எல்லாம் அப்புறம் தான் வருது!னு சொல்லி முடிச்சேன்...:)
அம்பாளை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்?னு கேட்டா அது மழைனால லோகத்துல என்ன எல்லாம் விளையும்?னு கேக்கர்த்துக்கு சமானம். அந்த மாதுளம்பூ நிறத்தாளை மனம் உருகி துதிப்பவர் கண்களில் ஒரு ஒளி இருக்கும், காளிதாஸனை ஒத்த கற்பனை வளம் இருக்கும், எப்போதும் மாறாத குழந்தை மனம் இருக்கும்,லோகம் முழுசையும் தன்னோட சொந்தபந்தமா பாவிக்கக் கூடிய தாயுள்ளம் இருக்கும், தேர்ந்தெடுத்து கிட்டிய ரத்தினம் போன்ற நட்புவட்டம் இருக்கும், இந்த்ராபுரியின் அரசனையும் இல்வாழ்க்கையில் இருக்கும் சாமானியனையும் சமமாக பாவிக்கும் நடு நிலையான மனசு இருக்கும்,இன்னும் சொல்ல முடியாத எல்லா கீர்த்தியும் செல்வமும் சாக்தனின் காலடியில் தவம் இருக்கும்.

கற்பூர நாயகிக்கு கற்பூர ஆரத்தி...:)
ஒரு அம்பாள் உம்மாச்சி ஸ்லோகம் பார்கலாமா இப்போ??..:)
ந ஜானாமி தானம் த சத்யான யோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந சஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
ஸ்லோகத்தோட அர்த்தம் - அம்மாடி பவானி! நேக்கு தானம் பண்ணவும் தெரியாது, யோகம் பண்ணவும் தெரியாது, மந்த்ரம் ஸ்தோத்ரம்னு எதுவுமே தெரியாது. உருப்படியா ஒரு பூஜை கூட பண்ண தெரியாதுன்னா பாத்துக்கோயேன். நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான். நீயே கதி!...;)
அம்பாளோட பதிவு என்பதால் பதிவின் நீளம் சற்று அதிகமாகிவிட்டது. வாசகர்கள் அன்புடன் பொறுத்தருள வேண்டும்.
ReplyDeleteஅன்பன்,
தக்குடு
HELLO BRO, I AM TRYING TO COMMUNICATE WITH U, BUT UR TOO BUSY I GUESS. PLS DO CHECK YOUR MAIL AS WELL.. OR REPLY HERE
DeleteHELLO THAKKUDU, I HAVE MAILED YOU , AND I WISH TO TALK TO YOU REGARDING AMBAL AND PUJAS... PLS DO REPLY SIR
Deleteகலக்கலா எழுதியிருக்க. நீ கதா காலேசேட்பம் ட்ரை பண்ணியிருக்கியா? உனக்கு அது ரொம்பவே நல்லா வரும்னு நான் நினைக்கிறேன்
ReplyDeleteதக்குடு
ReplyDelete\அம்பாளை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்?னு கேட்டா அது மழைனால லோகத்துல என்ன எல்லாம் விளையும்?னு கேக்கர்த்துக்கு சமானம். \
எனக்கு என்னமோ கோயிலுக்கு போனாலும் சரி வீட்டிலும் சரி, சுவாமியை பார்த்தவுடன் எதுவும் (எவ்வளவு பிரச்னை இருந்தாலும்) மனதில் தோன்றாது. நான் நலம் நீ நலமா என்று தான் கேட்க தோன்றுகிறது. மனதில் மட்டும் ஒரு நிம்மதி தோன்றும்.
//அந்த குட்டி குழந்தை தன்னோட அழகான வாய்ல இரண்டு மூனு தடவை வச்சு ருசி பாத்துட்டு கண்ணத்தில் குழி விழும்படியா ஒரு பொக்கை வாய் சிரிப்பு சிரிச்சா அந்த மிட்டாய் எவ்ளோ மதுரமான ஒரு வஸ்துவா இருக்கனும்? அதை மாதிரி தான் சாக்தமும்//
ReplyDeleteYou have a way with words... honestly envy that right now...:)
//அதை உணர்த்தர்துக்கு தான் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்படுகிறது//
ReplyDeleteஇப்படி ஒரு அர்த்தம் இருக்கா? ம்ம்ம்...
//தாய்மாதிரி நடிக்க முயற்சி பண்ணும் அவருக்கே இவ்ளோ கருணைனா எங்க அம்பாளுக்கு எவ்ளோ கருணை இருக்கும்//
சூப்பர் counter part...
//அம்பாளை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்?னு கேட்டா அது மழைனால லோகத்துல என்ன எல்லாம் விளையும்?னு கேக்கர்த்துக்கு சமானம்//
அழகான உவமை...
//கற்பூர நாயகிக்கு கற்பூர ஆரத்தி...:)//
நேர்ல பாக்கற மாதிரி இருக்கு.. எங்க பிடிக்கற உன் படங்கள் எல்லாம்...
//நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான். நீயே கதி!....:)//
நான் இதை அடிக்கடி நெனச்சுப்பேன்... சரியா மந்திரம் பாட்டுனு சொல்லி பூஜை செய்யறதில்லையேனு... ஆனா முழு மனசோட கண்ண மூடி நின்னாலும் சரி தான்னு சொல்லாம சொல்லிட்ட... :)
good post.
ReplyDelete-vgr
நீளமாவது ஒண்ணாவது. அவளைப் பத்தி எவ்ளோ எழுதினாலும் படிப்பேன். உண்மையில், இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிருச்சேன்னுதான் தோணிச்சு. அருமை, தக்குடு!
ReplyDelete//தாய்மாதிரி நடிக்க முயற்சி பண்ணும் அவருக்கே இவ்ளோ கருணைனா எங்க அம்பாளுக்கு எவ்ளோ கருணை இருக்கும் & நீங்க சொன்ன அம்மையப்பர்லையும் அம்மை தான் முதல்ல வருதுவோய்! அப்பன் எல்லாம் அப்புறம் தான் வருது!னு சொல்லி முடிச்சேன்...:)//
சூப்பர்! அம்மா பிள்ளை அப்படித்தான் பேசும் :)
//அம்பாளை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்?//
இந்த பத்தியை படிக்க படிக்க மனசு நெகிழ்ந்து போச்சு.
ஸ்லோகம் எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு :)
அம்மாவின் அருள் தக்குடுவுக்கு என்றென்றும் இருக்கும். வாழ்க!
அடாடா!
ReplyDeleteஆஹா, ஹை வெள்ளிக்கிழமையும் அதுவுமா பாலையின் அற்புதப் பட.
ReplyDeleteஅம்மா தாயேன்னு உருக வச்சுட்டியே தக்குடு. நீ ரொம்ப நன்றாக இருக்கணும்.
தை வெள்ளிக்கிழமைன்னு இருக்கணும். சௌந்தர்ய லஹரி படித்த மயக்கம் வருகிறது. நன்றி தக்குடு.
ReplyDeleteஅம்பாளைக் கொண்டுவந்து நேரே நிறுத்திட்டே தக்குடு.. நீ ஒரு கல்லிடை அபிராமி பட்டர். ;-) ;-)
ReplyDeleteஇதைப் படிக்கும் போது.. ஜனனி.. ஜனனி... ஜகம் நீ... பாட்டு மனசுக்குள்ளே ஒடித்து.. அட்டகாசம் தக்குடு! ;-)
ஓய்! அண்ணா!! சூப்பர்!! என்ன எமோஷனலாக்கிட்டேள். இந்த ச்லோகத்தை மனப்பாடம் பண்ணி தினமும் ப்ராத்திக்கப்போறேன். ரொம்ப THANKS !!
ReplyDeleteஅவரோட கற்பனாசக்தி காலை நேர சூரியனாய்,மணக்கும் மல்லிகையாய்,அதில் கிறங்கும் வண்டாய்,பொதிகைமலை தேனாய்,தாமிரபரணி ஊற்றாய்,அதில் எழும் அழகிய காற்றாய்,கார்காலத்து மயிலாய்,அதற்கு இசைக்கும் கருங்குயிலாய்,மாலை நேர இளவெயிலாய் பல வர்ணஜாலம் காட்டியது அம்பாள் மீதான வர்ணனையில் தான் என்பது உலகம் அறிந்த உண்மை.//
ReplyDeleteஅருமை. மொக்கையோட நீளத்துக்கு இது எவ்வளவோ தேவலை. எழுத எழுத முடியாத விஷயம். திருப்தியும் தராது! நன்றி.
தொடர
ReplyDelete"பகவத்பாதர் தன்னோட ஆத்மார்த்தமான ஆராதனையா எடுத்துண்டது சாக்தத்தைதான்..:)"
ReplyDeleteI disagree. If you say Ambal is closer to heart of AdiSankara, then atleast we can think of saying yes. Saktham is conceptually different from Advaitham. Some of his kritis are keeping in mind the skatham sect also. That is all we can infer. An advaitha sthapakar could not have been a saktha upasakar.
Thakkudu
ReplyDeleteNice post and you did lot of research in writing this - it seems. Very good.
To some extent what fieryblaster said is correct. Adhi Shankara wrote on all the philosophies but of them most were in Saktham.
Advaita is the merging of You and Me (jeevatma and paramatma) and looking everything around us as Iswara roopam and Sakthas see everything as Sakthi roopam. Sakthi being a part of Iswara is hence a subset of Advaita.
In short we could say Adhi sankara was also a Sakthi Upasaka and not just a Sakthi Upasaka.
@ Fiery blaster & Gopal anna - I agree with you!!..:)
ReplyDeleteசாக்தம் அத்வைதத்தின் ஒரு பகுதி என்று சாக்தர்கள் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அது தனி என்றும் பின்னால் ஆதிசங்கரர் அதையும் ஷண்மதங்களில் சேர்த்தார் என்றும் படித்த நினைவு. சாக்தர்கள் ஆதிபராசக்தி ஒருத்தியே மூலப்பொருள் என்றும், அனைவருமே அதாவது திரிமூர்த்தி, முத்தேவியர், என அனைத்துமே அவளிலிருந்து தோன்றியது என்பார்கள். இது குறித்து தேவி மஹாத்மியம், செளந்தர்யலஹரி, லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றில் வருகின்றன என்பதும் ஸ்ரீநிவாசகோபாலனுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDelete(பவானித்வம் அப்பிடின்னா தலைமைனு ஒரு அர்த்தம் வரும் & நான் நீ எனும் பேதம் அற்ற நீயே நானாகிறேன் எனும் நிலைனும் ஒரு அர்த்தம் வரும்).//
ReplyDeleteஇதை வைத்து அத்வைதம் என நினைக்கிறாங்களோ என்னமோ? கிட்டத்தட்ட கருத்து அதுவே என்றாலும் தேவியின் கருணையானது பக்தனை அவ்விதம் ஏற்றுக்கொண்டு தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாமல் அவன் அம்பிகையாகவே ஆகிவிடுகிறான். கிட்டத்தட்ட சாயுஜ்யத்தை அடைகிறான் அம்பிகையின் அருளால். இதற்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை உதாரணமாய்ச் சொல்ல முடியும்.
மொத்த பதிவும், ஒரே படத்தில் அடங்கிருச்சி! அந்தக் கடைசிப் படம்!
ReplyDeleteஉங்க இல்லத்தின் பூஜையறையா?
//வாலை குமரியடி கண்ணம்மா!!//
வாலை என்றால் என்ன-ன்னு அறியத் தர வேணுமாறு வேண்டுகிறேன்!
//ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
ReplyDeleteகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ//
அம்மா கிட்ட பொய் சொல்லாத குழந்தைகளா?
எனக்கு யோகம் தெரியாதும்மா!
எனக்கு பூஜை தெரியாதும்மா!
எனக்குத் தந்த்ரம் தெரியாதும்மா-ன்னு எல்லாம் சொல்லிட்டு அதையும் சைட்-ல பண்ணிக்கிட்டே இருப்போம்! ஆனாலும்...//நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான்//-ன்னு அப்பப்ப சொல்லிப்போம்! அந்தப் பொய் சொல்லலில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது! அம்மா அல்லவா, அதையும் ரசிக்கிறாள், சிரிக்கிறாள், அணைக்கிறாள்!
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ!
சரணம் சரணம், நீயே சரணம், என் தாயே!
//சும்மா அம்பாள்! அம்பாள்!னு சொல்லிண்டு இருக்கியே! பரமேஸ்வரனுக்கு தாயுமானவர்,அம்மையப்பர்னு எல்லாம் பேர் இருக்கு தெரியுமா?//
ReplyDeleteஓ தெரியுமே! அதெல்லாம் பேரு! பேருக்கு இருக்கு! :)
என்ன ஒரே விஷயம், அம்மாக்கு "அம்மா"-ன்னு பேரு இருக்கு தெரியுமோ?-ன்னு பதிலுக்குச் சொல்ல முடியாது! :)
சாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
அசரண்ய சரண்யாம், அனன்ய சரணஹ, சரணமஹம் ப்ரபத்யே!
புரிய வைத்ததற்கு நன்றி மாமி.
ReplyDelete@ டுபுக்கு - எதிர்கால திட்டத்துல இருக்கு!..:)
ReplyDelete@ வாசகன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!..:)
@ அடப்பாவி அக்கா - இமயமலை இந்த சாதாரண தெரு மேட்டை பாத்து பொறாமை படலாமா?..:) ஆத்மார்த்தமான பக்தி தான் முக்கியமான ஒன்று!..:)
@vgr - ஓக்கே சார்வாள்!..:P
@ கவினயா அக்கா - அபிராமியே வந்து கமண்ட் போட்ட மாதிரி இருக்கு!...:)
@ திவா அண்ணா - :))
@ வல்லிம்மா - ரொம்ப சந்தோஷம் அம்மா!..:)
@ மன்னார்குடி மைனர் - அபிராமி பட்டர் எல்லாம் ரொம்பவே ஓவர்...:)
@ sriram அண்ணா - சந்தோஷம்!..:)
@ கீதா மேடம் - பாட்டிக்கு இந்த சின்ன பையனோட எழுத்து பிடித்ததில் மகிழ்ச்சி!..;) மொக்கையை பத்தி நீங்க சொன்னா அது சரியா தான் இருக்கும்!..;P
ReplyDelete@ கோபால் அண்ணா - ஆமாம், நிறைய பாடுபட வேண்டி இருந்தது, அதனால தான் எழுத ரொம்ப நாள் ஆயிடுத்து..:)
@ கீதா பாட்டி - பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லறேள்! ஓரமா நின்னு கேட்டுக்கறேன்..:)
@ KRS அண்ணா - பாத்தேளா? அம்பாள் உங்களை இழுத்துண்டு வந்துட்டா!..:) அது என் நண்பரின் பூஜை அறை. பாலை என்பதே வாலை என்று மறுவியதா சொல்லி கேள்விபட்டதுண்டு (உடனே தரவு இருக்கா? வரவு இருக்கா?னு கேட்க வேண்டாம்)..;)
//எனக்குத் தந்த்ரம் தெரியாதும்மா-ன்னு எல்லாம் சொல்லிட்டு அதையும் சைட்-ல பண்ணிக்கிட்டே இருப்போம்! ஆனாலும்// நாம பண்ணர்து முழுவதும் ச்ரத்தையான பூஜை இல்லை எனும் எண்ணம் உள்ள வரை நமக்கு ஒன்னும் தெரியாது என்பதே உண்மை..:)
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!..:)
இதை செளந்தர்யலஹரில ஒரு ஸ்லோகத்துல அழகா சொல்லி இருப்பார் அந்த காலடி மைந்தன். "பவானி த்வம் தாசே!"னு அந்த ஸ்லோகம் ஆரம்பிக்கும்.//
ReplyDeleteஅபிராமியும், லலிதையும் ஒரே நேரத்தில் தரிசித்த பரவசம்.
:) well written!
ReplyDeleteenakku antha 'mittaai' example roooommmmmba pidichchuthu! kekkarathavoda konjam jaasthiyaave kedaikkum- nu neenga ezhuthirukkarathu enakku en amma va thaan nenachchukka thonuththu. 2 idli venumnaa "1 idli venum" nu sollanum. appo thaan 2 kidaikkum... :D
good one, boss!
இந்தப்பக்கம் இதுவரை பாக்கவே இல்லை. இப்பதான் பாத்தேன். நல்ல பதிவுக்கு நன்றி.
ReplyDelete"நிறைய உம்மாச்சி ஸ்லோகம்". உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது ஐயா...
ReplyDeleteTagged "Tiny Glass" - The Titanium Art Shop
ReplyDeleteTagged titanium mens rings "Tiny Glass" by TITARC. Tagged "Tiny Glass" · "Tiny Glass titanium dioxide in food Glass" - titanium price per ounce Tintriner and Glass apple watch titanium Packages · "Tiny Glass" - Tintriner and Glass Packages. citizen promaster titanium